நீண்டகாலமாக சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகள் தமது விடுதலையை வலியுறுத்தி போராட்டங்களை முன்னெடுக்கும் முகமாக அமையமொன்றை உருவாக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனையும் உள்ளடக்கி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட அரசியல் கட்சிகள், சிவில் சமுக மனித உரிமை அமைப்புகள், சட்டவாளர்கள், சர்வ மதத்தலைவர்கள், புலம்பெயர் உறவுகள் ஒன்றுபட்டு குறித்த அமையத்தை அமைக்க வேண்டும் என்றும் தமிழ் அரசியல் கைதிகள் கோரியுள்ளனர்.
விடுதலையை முன்னிறுத்தி கடந்த 10 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்திருந்த தமிழ் அரசியல் கைதிகள், தமது போராட்டத்தை நேற்று செவ்வாய்க்கிழமை தற்காலிகமாக முடிவுக்கு கொண்டு வந்தனர். இந்த நிலையில், அநுராதபுரம் சிறையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் மாவை சேனாதிராஜா உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் நேரில் சென்று பார்வையிட்டனர். அதன்போதே, தமிழ் அரசியல் கைதிகள் மேற்கண்ட கோரிக்கையை விடுத்துள்ளனர்.

0 Responses to தமது விடுதலைக்காக அமையமொன்றை உருவாக்க தமிழ் அரசியல் கைதிகள் கோரிக்கை!