Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழ் அரசியல் கைதிகளுக்கு புனர்வாழ்வு அளிப்பதற்கு தாம் தயாராக இருக்கின்ற போதிலும், அது தொடர்பில் நீதிமன்றமே தீர்மானிக்க வேண்டும் என்று புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கைதிகளின் புனர்வாழ்வு தொடர்பில் நீதிமன்றம் தீர்மானித்து, சிறைச்சாலை அதிகாரிகளுக்கு அனுப்பிவைக்கும் நீதிமன்ற உத்தரவுக்கு அமையவே அவர்களின் புனர்வாழ்வு தொடர்பில் தீர்மானிக்க முடியும் என்றும் புனர்வாழ்வு ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது, “நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமையவே புனர்வாழ்வு பெறுபவர்களின் பெயர் பட்டியல் தயாரிக்கப்படும். அதனை எமக்கு அனுப்பிவைப்பார்கள். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு ஏற்கனவே இவர்கள் சிறைத்தண்டனை அனுபவித்திருப்பதால், அவர்களுக்கான புனர்வாழ்வுக் காலம் உள்ளிட்ட விடயங்களை நீதிமன்றமே தீர்மானிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகளுக்கு புனர்வாழ்வளிக்க நாம் தயாராக இருக்கின்றோம். சாதாரணமாக ஒரு வருடகாலம் புனர்வாழ்வு வழங்கப்படும். வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்திலேயே புனர்வாழ்வு வழங்கப்படுகிறது. சாதாரணமான புனர்வாழ்வு நடவடிக்கையானது ஆறு மாதங்கள் புனர்வாழ்வாகவும், எஞ்சிய ஆறுமாதங்கள் தொழில்சார் பயிற்சிகளும் வழங்கப்படும். எனினும், இவர்களுக்கு எவ்வாறான புனர்வாழ்வு வழங்கப்பட வேண்டும் என்பதை நீதிமன்றமே எமக்கு அறிவிக்கும்.” என்றுள்ளார்.

0 Responses to அரசியல் கைதிகளுக்கான புனர்வாழ்வு திட்டத்தை நீதிமன்றமே இறுதி செய்ய வேண்டும்: ஜனக ரத்நாயக்க

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com