தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து உயிரிழந்தவர்களை நினைவு கூரும் உரிமை தமிழ் மக்களுக்கு உண்டு என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
நினைவுகூருவதற்கான உரிமைக்கு அரசாங்கம் இணங்கியுள்ளது. இந்த வாரம் தமது நாயகர்களை நினைவு கூருவதற்கு தமிழ் மக்களை அனுமதிக்க வேண்டும். கடந்த அரசாங்கம், புலிகள் இயக்கத்திலிருந்து உயிரிழந்தவர்களின் கல்லறைகளை உடைத்து அவமரியாதையான செயலில் ஈடுபட்டது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று சனிக்கிழமை வரவு செலவுத் திட்டத்தின் மீதான விவாதத்தை எதிர்க்கட்சிகளின் சார்பில் ஆரம்பித்து உரையாற்றும் போதே எம்.ஏ.சுமந்திரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to மாவீரர்களை நினைவுகூரும் உரிமை தமிழ் மக்களுக்கு உண்டு: சுமந்திரன்