பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் பிணை நிபந்தனையில் மாற்றம் செய்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் இரண்டு வாரத்திற்கு ஒரு முறை (ஞாயிற்றுக்கிழமை) வவுனியா அல்லது கொழும்பிலுள்ள குற்றத்தடுப்பு புலனாய்வுப் பிரிவில் கையெடுத்திட வேண்டும் என்று நீதிமன்றத்தின் வழங்கப்பட்ட பிணை நிபந்தனைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது அவர்களை பாரிய அசௌகரியத்திற்கு உட்படுத்துவதனால் அவர்கள் வசிக்கும் பகுதிகளிலுள்ள பொலிஸ் நிலையத்தில் கையெழுத்திட ஒழுங்கை மேற்கொள்ளுமாறு புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் வலியுறுத்தியதன் காரணமாக அந்தப் பிணை நிபந்தனையை மாற்றுவதற்கான நடவடிக்கை நீதிமன்றத்தின் ஊடாக மேற்கொள்ளப்படும் என சட்டமா அதிபர் திணைக்களம் அறிவித்துள்ளது.
நீண்ட காலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளில், அண்மையில் 39 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

0 Responses to தமிழ் அரசியல் கைதிகளின் பிணை நிபந்தனைகளில் மாற்றம் செய்வதற்கு நடவடிக்கை!