திருகோணமலையிலுள்ள கடற்படைத் தளத்தில் நிலக்கீழ் இரகசியத் தடுப்பு முகாமில் பெரும் எண்ணிக்கையானோர் நீண்ட காலமாக தடுத்து வைத்து விசாரணை செய்யப்பட்டுள்ளமையை தம்மால் புரிந்து கொள்ள முடியவதாக இலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் காணாமற்போனோர் மற்றும் காணாமலாக்கப்பட்டோர் அமைப்பின் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான செயற்பாடுகள் இலங்கை அரசாங்கத்தின் உயர் மட்டங்களுக்கு தெரியப்படுத்தாமல் நடந்திருக்க வாய்ப்பு இல்லை எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பல உயிர்கள் இழந்திருக்ககூடும் என நம்பப்படும் வகையில் மிகவும் பாரதூரமான விசாரணைகள் இங்கு நடைபெற்றிருக்கலாமென தாங்கள் நம்புவதாகவும், இந்த நிலக்கீழ் இரகசிய தடுப்பு முகாம்களில் சித்திரவதை இடம்பெற்றிருக்குமா? என்பதனை ஊர்ஜிதம் செய்ய முடியாதுள்ள போதும் இவை உத்தியோகபூர்வ தடுப்பு முகாமொன்று அமைய வேண்டிய முறையிலிருந்து முற்றிலும் மாறுபட்ட விதத்தில் வடிவமைக்கப்பட்டிருந்ததை தங்களால் நேரில் பார்க்க முடிந்ததாகவும் ஐக்கிய நாடுகளின் பிரதிநிதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
காணாமலாக்கப்படுவது சர்வதேச சட்டத்தின்படி குற்றச்செயலாகும். இந்நிலையில், தரக்குறைவான இரகசிய முகாமொன்றில் தடுத்து வைக்கப்படுவது மனித உரிமை மீறலாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளனர்.
பத்து நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்திருந்த மேற்படி பிரதிநிதிகள் குழு தமது பயணத்தின் இறுதி நாளான நேற்று புதன்கிழமை கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் நடத்திய ஊடக மாநாட்லேயே இதனைக் குறிப்பிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் நிபுணர்கள் தெரிவித்துள்ளதாவது, எமது விஜயத்தின் ஒரு பாரிய கண்டுபிடிப்பாகவே இந்த நிலக்கீழ் இரகசிய தடுப்பு முகாமை நாம் கருதுகின்றோம். பாதிக்கப்பட்ட குடும்பத்தார் வழங்கிய தகவல்களுக்கமைவாகவே எம்மால் இந்த முகாமை சென்றடைய முடிந்தது. சி.ஐ.டி. அதிகாரியொருவர் எம்மை அங்கு அழைத்துச் சென்று விசாரணைகள் நடத்தப்பட்ட இடங்களை காண்பித்தார்.
திருகோணமலை கடற்படை தளத்தின் நிலக்கீழ் இரகசிய தடுப்பு மிகாமின் சுவர்களில் தடுத்து வைக்கப்பட்டவர்களால் கூடுதலாக எழுதப்பட்டிருந்தன. அங்கே “20107025” என்ற இலக்கத்தை நாம் கண்டோம். இது 2010 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 25 ஆம் திகதியை குறிக்குமென நாம் நம்புகின்றோம். இதனடிப்படையில் 2009 ஆம் ஆண்டே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதால் இவர்கள் ஆகக்குறைந்தது 2010 ஆம் ஆண்டு வரையிலாயினும் இங்கே தடுத்து வைத்திருக்க வேண்டுமென எம்மால் ஊகிக்க முடிகிறது.
கடற்படை தளத்தின் நிலத்துக்கு கீழாகவே இந்த முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதன் உள்துழைவாயில் பிறர் அறியாத வகையில் மர்மமான முறையில் காணப்பட்டது. இதற்குள் ஒருவர் அழைத்துச் செல்வதனை வெளியிலிருந்து எவராலும் பார்க்க முடியாது. ஒரு கட்டடத்தில் நிலத்துக்கு கீழ் சுமார் 12 சிறைக்கூடங்கள் காணப்பட்டன. அவ்வாறு நாம் குறித்த வளாகத்தில் மூன்று கட்டடங்களைக் கண்டோம். மேலும் பல சிறைக் கூடங்கள் அமைந்திருக்க கூடும் என்றே நம்புகின்றோம்.
இந்த இரகசிய சிறைகள் மிகவும் நுட்பமான முறையில் அமைந்திருந்தன. தடுத்து வைக்கப்பட்டோருக்கு உணவு மற்றும் ஓய்வும் வழங்கப்பட்டிருக்கலாம். 2009 ஆம் ஆண்டே அரசாங்கத்தினால் உத்தியோகபூர்வ விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதனால் 2010 வரையில் பெரும் எண்ணிக்கையானோர் இந்த இரகசிய முகாமில் தடுத்து வைத்திருக்கக்கூடும் என்ற போதும் இவர்களின் எண்ணிக்கை இவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த காலத்தை எம்மால் திருத்தமாக கூற முடியாதுள்ளது.
குடும்பத்தார் கூறுவதன்படி, தடுத்து வைக்கப்பட்டோர் இரகசிய முகாமிற்குள் அழைத்துச் செல்லப்படும் வரையில் அட்டைகளின் உபயோகத்துடன் இவர்கள் தொலைபேசியில் உரையாடியுள்ளனர். அதன் பின்னரே தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் சுமார் 20 ஆயிரம் பேர் காணாமற்போயுள்ளனர். திருகோணமலையைப் போன்று பல தடுப்பு முகாம்கள் நாட்டில் இருக்கக்கூடும். என்ற போதும் அவை குறித்து விசாரணை நடத்த போதுமான தகவல்கள் எம்மிடம் இருக்கவில்லை. எனவே, அரசாங்கம் காணாமற்போனோர் காணாமலாக்கப்பட்டோர், இரகசிய தடுப்பு முகாம்கள், புதைகுழிகள் பற்றிய சரியான தகவல்களை எமக்கு அறியத்தர வேண்டும்.
இதேவேளை, இலங்கையில் காணாமற்போனோர் எங்கே அழைத்துச் செல்லப்பட்டார்கள், அவர்களுக்கு என்ன நடந்திருக்குமென நீடித்து வந்த கேள்விக்கு திருகோணமலை இரகசிய தடுப்பு முகாம் மூலம் ஓரளவு பதில் கிடைத்துள்ளது.
காணாமற்போனோர் தொடர்பில் இலங்கை அரசாங்கம் முன்னெடுத்து வரும் செயற்பாடுகளில் பாதிக்கப்பட்டோரின் உறவினர்கள் நம்பிக்கை இழந்துள்ள நிலையில் அவர்களுக்கான உண்மையை அறியத்தரும் நம்பகத்தன்மை நிறைந்த ஆக்கபூர்வமான விசாரணைகளை ஆரம்பிப்பதற்கான உரிய தருணம் இது.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கை அரசாங்கம் பல வாக்குறுதிகளை வழங்கியிருந்தது. இதில் நேர்மறையான செயற்பாடுகளை அவதானிக்க முடிந்த போதும் காலக்கெடு முடிவடைந்து விட்டதனால் அரசாங்கம் தமது செயற்பாடுகளை துரிதப்படுத்த வேண்டும்.
காணாமற்போனோரின் உறவினர்களிடையே நம்பிக்கை கட்டியெழுப்பப்படும் நிலையிலேயே நல்லிணக்கச் செயற்பாடுகள் வெற்றியடைந்ததாக கருத முடியும். காணாமற் போனோர் மற்றும் காணாமலாக்கப்பட்டோர் தொடர்பில் சுதந்திரமானதொரு அமைப்பு விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும்.
அரசாங்கத்தினால் இதற்கென ஆணைக்குழு ஒன்று நிறுவப்பட்டிருப்பதனை நாம் வரவேற்கின்றோம். எனினும் அதன் செயற்பாடுகள் அரசாங்க செயற்பாடுகளை மாத்திரம் மையப்படுத்துவது முழு சமூகத்தையும் பிரதிபலிக்கும் வகையில் இருத்தல் வேண்டும். இதன் செயற்பாடுகள் 03 மொழிகளிலும் அறிவிக்கப்பட வேண்டும். உண்மையை கண்டறியும் ஆணைக்குழு சர்வதேச நிபுணர்களின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்க வேண்டும்.
சுமார் 200 குடும்பத்தாருடன் நேர்காணலை மேற்கொண்டோம். அவர்கள் சாட்சியங்கள் அளிக்கையில் அச்சுறுத்தப்பட்டதாக குற்றம் சுமத்தினர். அநேகமான குற்றச்சாட்டுகள் சி.ஐ.டி.யினருக்கு எதிரானவை. எனவே, காணாமற்போனோரின் குடும்பத்தாருக்கு எவ்வித அச்சுறுத்தல் அல்லது துன்புறுத்தல்களை வழங்கக்கூடாது என இராணுவம், பாதுகாப்பு மற்றும் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அனைவருக்கும் கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலங்கையின் பயங்கரவாத தடுப்புச் சட்டம் சர்வதேச சட்டத்தின் தரத்திற்கமைவாக இல்லாமையினாலேயே பலரை இரகசியமாக தடுத்து வைத்து விசாரணை செய்யும் நிலை உருவானதால் அச்சட்டத்தை மறுசீரமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். காணாமற்போனவர்கள் அதிகம் பாதிப்படைந்துள்ளனர். பெண்களும் சிறுவர்களுமே அவர்களின் நலனுக்காக வரவு - செலவு திட்டத்தில் கூடுதல் நிதி ஒதுக்கப்பட வேண்டும்.
காணாமற்போனோருக்காக வழங்கப்படும் நட்டஈட்டுத் தொகை அதிகரிக்கப்பட வேண்டும். காணாமற்போனோருக்காக ஏற்கனவே வழங்கப்பட்ட மரணச் சான்றிதழை மாற்றி காணாமற்போனோருக்கான சான்றிதழை அரசாங்கம் குடும்பத்தாருக்கு வழங்க வேண்டும்.” என்றுள்ளனர்.
ஐக்கிய நாடுகள் பிரதிநிதிகள் குழுவில் பெர்னார்ட் டூஹேய்ம், டி-யுங்பைக், ஏரியல் டுலிட்ஸ்கி ஆகியோர் அங்கம் வகித்திருந்தனர்.

0 Responses to திருகோணமலை கடற்படைத் தளத்தில் நிலக்கீழ் இரகசிய தடுப்பு முகாம்: ஐ.நா. நிபுணர் குழு