இலங்கை வந்திருந்த காணாமற்போனவர்கள் தொடர்பாக ஆராயும் ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவினை சந்தித்து சாட்சியங்களை அளித்தவர்களுக்கு அரச படையினரால் அழுத்தம் கொடுக்கப்பட்டதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை வந்திருக்கும் ஐக்கிய நாடுகள் குழுவினரின் விஜயத்தின் முடிவில் தன்னைச் சந்தித்து தமது விஜயம் குறித்து விளக்கமளித்திருந்ததாகவும், இதன்போது தமது குழுவினரைச் சந்தித்தவர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்ட விடயம் குறித்து முறைப்பாடு செய்யப்பட்டதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவ்வாறு யாராவது அழுத்தம் கொடுத்திருந்தால் அது குறித்து விசாரணை நடத்தி அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும். இவ்வாறான செயற்பாடுகள் அரசாங்கத்தின் கொள்கையாக இருக்காதபோதும், ஒருசிலர் இன்னமும் பழைய சிந்தனையுடன் செயற்படுகின்றனர். இவ்வாறு செயற்படுபவர்கள் ஒவ்வொரு நிறுவனத்திலும் இருப்பது எமக்குத் தெரியும். குற்றச்சாட்டு உண்மையாயின் விசாரணை நடத்தி அவ்வாறானவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

0 Responses to ஐ.நா. நிபுணர்களை சந்தித்தவர்களுக்கு அச்சுறுத்தல்; விசாரணைகள் முன்னெடுக்கப்படும் மங்கள அறிவிப்பு!