நீண்டகாலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இன்று வெள்ளிக்கிழமை பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது.
வடக்கு, கிழக்கிலுள்ள சகல வர்த்தக நிலையங்கள், அலுவலகங்கள், பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. போக்குவரத்தும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை துரிதப்படுத்துமாறு அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தக் ஹர்த்தாலுக்கான அழைப்பை விடுத்திருந்தது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்ட வருடமாக சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகளின் விடுதலைக்காக நடத்தப்படும் இந்த ஹர்த்தாலுடன் பல கட்சிகளும் இணைந்து கொண்டுள்ளன.
மருத்துவசேவை உள்ளிட்ட அவசர சேவைகளுக்குப் பாதிப்பு இல்லாமல் ஹர்த்தாலுக்கு சகலரும் ஒத்துழைக்கவேண்டும் என வடக்கு மாகாண சபை கோரியுள்ளது. பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், ஆசிரியர் ஒன்றியம் என பல தரப்பட்ட அமைப்புக்களும் ஹர்த்தாலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

0 Responses to தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வடக்கு- கிழக்கில் ஹர்த்தால்!