Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மலேசியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இன்று 12 அடி உயரம் கொண்ட சுவாமி விவேகனந்தரின் வெண்லக சிலையை திறந்துவைத்து உரை நிகழ்த்தினார்.

10வது கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டிலும், ஆசியான் மாநாட்டிலும் கலந்துகொள்வதற்காக மலேசியாவுக்கு விஜயம் மேற்கொண்ட நரேந்திர மோடி, சுமார் 15,000 க்கு மேற்பட்டோர் கூடியிருந்த மலேசிய தேசியக் கண்காட்சி மண்டபத்தில் உரை நிகழ்த்தினார்.

அதன் போது, வணக்கம் என தமிழில் உரையை தொடங்கிய மோடி, மலேசியாவின் 30 மில்லியன் மொத்த சனத்தொகையில் சுமார் 2 மில்லியன் பேர் இந்தியர்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள். இந்தியாவின் வளர்ச்சியிலும் மாத்திரமல்லாது, மலேசியாவின் வளர்ச்சியிலும் தமிழர்களின் பங்களிப்பு அளப்பரியது என்றார்.

«ஒரே ஆசியா» எனும் சொற் பதத்தை முதன்முதலாக தெரிவித்தவர் சுவாமி விவேகானந்தர். அது ஒரு தனி மனிதரது பெயரல்ல. இந்தியாவின் ஆத்மா. ஆயிரம் ஆண்டுகால இந்தியப் பண்பாட்டின் அடையாளம். வேதங்கள் முதல் விவேகானந்தர் வரை இந்தியக் கலாச்சாரமானது செறிவுள்ளது. இன்று உபநிடதங்களில் இருந்து செயற்கைக் கோள்கள் வரை இந்தியா வளர்ச்சி கண்டுள்ளது.

இன்று உலகம் சந்தித்து வரும் இரண்டு மிகப்பெரும் சவால்கள் தீவிரவாதமும், கால நிலை மாற்றமும் தான்.

உலகில் எந்தவொரு நாடும் தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகளாக மாறிவிடக் கூடாது. அதற்கான பணபலம், ஆயுத பலம் எதுவும் எந்தவொரு நாட்டிடமிருந்தும் கிடைத்து விடக் கூடாது. மதம் என்பது தீவிரவாதத்திலிருந்து பிரிக்கப்படவேண்டும்.

தெற்காசிய நாடுகளிடம் மிகுந்த ஒற்றுமையும், பாதுகாப்பும் உள்ளது. இந்தியாவின் மிக உறுதியான நட்பு நாடுகளில் மலேசியா ஒன்று எனக் கூறுவதில் மகிழ்வடைகிறேன்.

மலேசியாவே உண்மையான ஆசியா. புதிய பரிமாணம், கடின உழைப்பு, பாரம்பரியத் தொண்மை அனைத்தும் இங்கு தனித்துவமானது. நான் மலேசியாவுக்கு விஜயம் மேற்கொள்வதில் மகிழ்வடைகிறேன் என்றார்.

0 Responses to மலேசியாவில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி!: சுவாமி விவேகானந்தர் சிலையை திறந்துவைத்து உரை நிகழ்த்தினார்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com