பாராளுமன்றத்தில் உறுப்பினர்கள் தன்னிடம் நேரடியாக கேள்விகளை எழுப்புவதற்கான சந்தர்ப்பத்தினை வழங்குவதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார்.
அதன்படி, பாராளுமன்றத் தொடர் ஆரம்பமாகியதும் ஒவ்வொரு வியாழக்கிழமையும் முதல் 30 நிமிடங்கள் இதற்காக ஒதுக்கப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சபாநாயகருக்கு கடிதமூலம் அறிவித்துள்ளார்.
பிரதமரிடம் கேட்கவுள்ள கேள்விகளை முன்கூட்டியே பிரதமரின் காரியாலயத்துக்கு அனுப்பிவைக்க வேண்டும் என்று சபாநாயகர் கரு ஜயசூரிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவிக்கவுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரிடம் நேரடியாகக் கேள்விகளைக் கேட்பதற்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளமை ஜனநாயக நாடொன்றில் மேற்கொள்ளப்படும் பயனுள்ள முன்மாதிரியாகும் என சபாநாயகர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

0 Responses to பாராளுமன்றத்தில் பிரதமரிடம் நேரடியாக கேள்வியெழுப்புவதற்கு அனுமதி!