Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பீகார் தோல்வியை சகித்துக்கொள்ள முடியாமல் ராகுல் குடியுரிமையை விமர்சிக்கிறார்கள் என்று அகில இந்திய மகிளா காங்கிரஸ் செயலாளர் நக்மா கூறியுள்ளார்.

நக்மா சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கோட்டூர் புரத்துக்கு நேரில் சென்று பார்வையிட உள்ளார். முன்னதாக அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பாஜக மூத்த தலைவர்களுள் ஒருவரான சுப்ரமணிய சாமி, ராகுல் காந்தி பிரிட்டன் குடியுரிமை பெற்றவர் என்கிற குற்றச்சாட்டை வைத்திருந்தார்.இதுக்குறித்த நக்மாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த நக்மா, ராகுல் காந்தி இந்தியக் குடிமகன் என்றும், இதற்கான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டே அவர் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார் என்று தெரிவித்தார்.

பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை ஏற்றமும் பீகார் தேர்தலில் பாஜக தோல்விக்கு ஒரு காரணம் என்று நக்மா கூறினார்.பீகார் தேர்தல் தோல்வியை பாஜகவால் சகித்துக்கொள்ள முடியவில்லை. எனவேதான் ராகுல் காந்தி குறித்து தவறாக விமர்சிக்கிறார்கள் என்று நக்மா கூறினார்.

0 Responses to பீகார் தோல்வியை சகித்துக்கொள்ள முடியாமல் ராகுல் குடியுரிமையை விமர்சிக்கிறார்கள்: நக்மா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com