சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ரயில் நிலையம் ஒன்றில் சந்தேகத்திற்குரிய கருப்பு பெட்டி ஒன்று அனாதையாக கிடந்ததை தொடர்ந்து பயணிகளை அவசரமாக வெளியேற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுவிஸின் ஜெனிவா நகரில் Cornavin என்ற முக்கிய ரயில் நிலையம் அமைந்துள்ளது. இந்த ரயில் நிலையம் வழியாக தான் பிரான்ஸ் நாட்டிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் ஜெனிவாவில் பணிபுரிய பயணம் மேற்கொள்வார்கள்.
இந்நிலையில், நேற்று பிற்பகல் 4.33 மணியளவில், Cornavin ரயில் நிலையத்தில் மர்மமான முறையில் பெரிய அளவிலான கருப்பு பெட்டி ஒன்று அனாதையாக கிடப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனை தொடர்ந்து, வெடிகுண்டு சோதனை செய்யும் பொலிஸ் பிரிவுக்கு தகவல் அளிக்கப்பட்டதும் அவர்கள் உடனடியாக ரயில் நிலையம் வந்துள்ளனர்.
முன்னதாக ரயில் நிலையத்தில் உள்ள 4,5,6,7 மற்றும் 8 ஆகிய 5 நடைமேடைகளில் இருந்த பொதுமக்களை அவசரமாக வெளியேற்றியதுடன், அவற்றை 5.30 மணிவரை தற்காலிகமாக மூடினர்.
மோப்ப நாயுடன் வந்த பொலிசார் சோதனை செய்ததில், அங்கு கிடந்தது சாதாரண பெட்டி என்றும் அதனால் பொதுமக்களுக்கு எந்த அச்சமும் இல்லை என தெரியவந்தது.
சுமார் ஒரு மணி நேரமாக ரயில் நிலையத்தில் பரபரப்பு காணப்பட்டதால், அந்த நிலையத்திற்கு வரவேண்டிய ரயில்கள் சிறிது தாமதமாகவே வந்துள்ளன.
பாரீஸில் நடந்த தற்கொலை படை தாக்குதலில் 129 பேர் கொல்லப்பட்டதை தொடர்ந்து சுவிட்சர்லாந்து எல்லைகளை கூர்ந்து கண்காணிக்க வேண்டும் என சுவிஸ் மக்கள் கட்சி ஏற்கனவே வலியுறுத்திருந்தது.
எனினும், சுவிஸ் ஜனாதிபதியான Simonetta Sommaruga கூறுகையில், பக்கத்து நாடுகளில் இருந்து சுவிஸ் நாட்டிற்கு வரும் ஒவ்வொரு நபரையும் பரிசோதனை செய்வது என்பது இயலாத காரியம் என கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

0 Responses to சுவிஸ் ரயில் நிலையத்தில் அனாதையாக கிடந்த ‘மர்ம பெட்டி’: அதிரடியாக பயணிகளை வெளியேற்றிய பொலிசார்