நியூசிலாந்து தேசியக் கொடியின் வடிவமைப்பை மாற்றும் விருப்பத்திற்கான முதலாவது வாக்கெடுப்பு தற்போது அந்நாடு முழுவதும் தொடங்கியுள்ளது.
மாறிவரும் நவீன நியூசிலாந்துக்கு ஏற்ற வகையில் அந்நாட்டின் தற்போதைய தேசியக் கொடி இல்லை எனவும், ஆஸ்திரேலியாவின் தேசியக் கொடியிலிருந்து பெரிய வேறுபாடு எதையும் அக்கொடி காண்பிக்கவில்லை எனக் கருதியும் நியூசிலாந்தின் தேசியக் கொடியை மாற்றும் எண்ணத்திற்கு அந்நாட்டு மக்களிடம் அபிப்பிராயம் கேட்டது அந்நாட்டரசு.
இதையடுத்து, நியூசிலாந்தின் தேசியக் கொடி உருவமைப்பு குழுவுக்கு சுமார் 10,292 புதிய வடிவங்கள் அனுப்பிவைக்கப்பட்டன.
அவற்றிலிருந்து 5 வடிவங்களை தேர்ந்தெடுத்துள்ள தேசியக் கொடி உருவமைப்பு குழு அவற்றிலிருந்து ஒன்றைத் தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பை தற்போது நடத்தி வருகிறது. தேசியக் கொடி, எங்கு, எதிலெல்லாம் பயன்படுத்தப்படுமோ, அந்த அனைத்து இடங்களிலும் இப்புதிய ஐந்து வடிவங்களையும் பார்வைக்கு வைத்தும் படி வைத்து பொதுமக்களின் விருப்பத்தைப் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஐந்து வடிவங்களிலிருந்து, பொதுமக்களின் அதிக விருப்பத்தின் பெயரில் ஒன்று தெரிவு செய்யப்பட்ட பின்னர் 2016ம் ஆண்டு நடைபெறவுள்ள இரண்டாவது கட்ட வாக்கெடுப்பின் போது, நிச்சயமாக நியூசிலாந்து தேசியக் கொடி மாற்றம் செய்யப்பட வேண்டுமா என கேள்வி எழுப்பப்படவுள்ளது.

0 Responses to நியூசிலாந்தின் புதிய தேசியக் கொடியில் இடம்பெறப்போகும் வடிவம் எது? - தொடங்கியது தேர்தல்!