ஐநாவுக்கான அமெரிக்காவின் நிரநச்தர வதிவிடப் பிரதிநிதி சமந்தா பவர் இலங்கைக்கு மேற்கொண்டுள்ள பயணம் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.
புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள இரண்டாவது அமெரிக்க உயர்நிலைப் பிரமுகர் இவராவர்.
மகிந்த அரசாங்கம் தோற்டகடிக்கப்பட்ட பின்னர், அமெரிக்க அரசாங்கத்தின் உயர்நிலைப் பிரமுகர்கள் பலர் கொழும்புக்கான பயணங்களை அடிக்கடி மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் இருந்து அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி, தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான உதவிச் செயலர் நிஷா பிஸ்வால், ஜனநாயகம், மனித உரிமைகள், தொழிலாளர் விவகாரங்களுக்கான உதவிச் செயலர் ரொம் மாலினோவ்ஸ்கி உள்ளிட்ட பலரும் இதுவரை கொழும்பு வந்து சென்றுள்ளனர்.
நிஷா பிஸ்வால் ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர் மூன்று தடவைகள் இலங்கைக்கு வந்து சென்றிருக்கிறார்.
ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர், பெப்ரவரியில் முதல் தடவையும், மே மாதம் ஜோன் கெரியுடன் இரண்டாவது தடவையும், ஜெனிவா தீர்மானத்துக்கு முன்னதாக கடந்த செப்டம்பரில் மூன்றாவது தடவையும் அவர் இலங்கைக்கு வந்திருந்தார்.
இப்போது இலங்கை வந்திருக்கிறார் சமந்தா பவர். இவர் இலங்கைக்கு பயணம் மேற்கொள்வது இது இரண்டாவது தடவை. ஏற்கனவே 2010ம் ஆண்டு ஜூன் மாதம் இவர் இலங்கைக்கு வந்திருந்தார்.
போர் முடிவுக்கு வந்து ஓராண்டு கழித்து இடம்பெற்ற அந்தப் பயணத்தின் போது, போர்க்குற்றங்கள் மற்றும் மீறல்களுக்குப் பொறுப்புக்கூற நடவடிக்கை எடுக்கப்படுவதன் அவசியத்தை ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்சவிடம் சமந்தா பவர் அப்போது வலியுறுத்தியிருந்தார்.
அந்தக் காலகட்டத்தில் சமந்தா பவர் ஐநாவுக்கான நிரந்தரப் பிரதிநிதியாக இருக்கவில்லை.
தேசிய பாதுகாப்புச் சபை உறுப்பினர், அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் சிறப்பு உதவியாளர் மற்றும் பலதரப்பு மற்றும் மனித உரிமைகள் விவகாரங்களுக்கான பணிப்பாளர் ஆகிய பதவிகளையே வகித்திருந்தார்.
அப்போது சமந்தா பவர் வழங்கிய ஆலோசனையை மகிந்த ராஜபக்ச செயற்படுத்த தயாராக இருக்கவில்லை.
அதன் விளைவாகவே ஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானங்களை அமெரிக்கா கொண்டுவரத் தொடங்கியது.
போர்க்குற்றங்கள் குறித்த விசாரணையை நல்லிணக்கத்துக்கான முயற்சிகளை மேற்கொள்ள இலங்கைக்கு அழுத்தம் கொடுத்த அமெரிக்க அதிகாரிகள் மத்தியில் சமந்தா பவர் முக்கியமானவர்.
ஒபாமாவின் தேர்தல் பிரசாரங்களுக்கான ஆலோசகராக இருந்து இராஜாங்கத் திணைக்களத்துக்கு வந்த சமந்தா பவர், அடிப்படையில் ஒரு ஊடகவியலாளர். பேராசிரியர், மனிதஉரிமை ஆர்வலர்., யூகோஸ்லாவியா போர் பற்றிய செய்திகளை வழங்கிய ஊடகவியலாளர், அமெரிக்காவின் வெளிவிவகார கொள்கைகளை விமர்சித்து நூல் எழுதியவர். இனப்படுகொலைகள், போர்க்குற்றங்களுக்கு எதிரான கடுமையான போக்கைக் கொண்டிருந்த சமந்தா பவர், இப்போது ஐநாவுக்கான அமெரிக்காவின் தூவராக இருக்கிறார்.
இது அமெரிக்காவில் அமைச்சரவை அந்தஸ்துடைய ஒரு முக்கிய பதவியாகும்.
ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் புதியதொரு முகத்துடன் கொழும்பு வந்திருக்கும் சமந்தா பவர், இங்கும் வேறொரு நிலையைத்தான் தரிசிக்க முடிந்திருக்கிறது.
சர்வதேச சமூகத்துடன் முரண்படாத வகையில் செயற்பட முனையும் அதேநேரம், அதிகளவில் விட்டுக் கொடுக்கவும் தயாராக இல்லாத ஒரு அரசாங்கம், ஓரளவுக்கேனும் வெளிப்படையாகப் பேசத்தக்க, போராட்டம் நடத்தக்ககூடிய ஒரு ஜனநாயக சூழல் என்பன இலங்கையில் அவருக்கு வேறுபட்டதொரு கண்ணோட்டத்தைக் காண்பிக்கக் கூடும். ஆயினும் மனித உரிமைகள் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படாத பொதுத்தன்மை அவரது முன்னைய பயணத்துக்கும், இப்போதைய பயணத்துக்கும் வேறுபாட்டைக் காண்டபித்திருக்காது.
போர்க்குற்றங்கள் மற்றும் மனிதஉரிமை மீறல்களுக்கு எதிரான போக்கை கொண்டிருப்பவர் என்ற வகையில், வெறும் வாக்குறுதிகள் மட்டும் சமந்தா பவருக்கு திருப்தியை அளித்திருக்கும் என்று கூற முடியாது.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் கொள்கையையும், அமெரிக்க நலனையும் பாதுகாப்பவர் என்ற வகையில் அவர் சில கருத்துக்களை முன்வைத்தாலும், அடிப்படையில் ஒரு ஊடகவியலாளர், மனித உரிமை ஆர்வலர், எழுத்தாளர் என்ற வகையில் இப்போதைய நிலையையிட்டு அவரால் அதிகம் திருப்தி கொள்ள முடியாது.
அதேவேளை ஐநாவுக்கான அமெரிக்கத் தூதுவரான சமந்தா பவருக்கு இலங்கையில் என்ன வேலை இருக்கிறது? அவருக்கு அமெரிக்காவிலும் ஐநாவிலும் தானே கடமை என்று கேள்வி எழுப்பியிருந்தார் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில.
ஆனால் இலங்கை விவகாரத்துக்கும் சமந்தா பவருக்கும் இப்போதும் நிறையவே தொடர்புகள் இருக்கின்றன.
இலங்கை தொடர்பான தீர்மானங்களை ஜெனிவாவில் கொண்டு வருவதில் முக்கிய பங்காற்றிய அமெரிக்க அதிகாரிகளில் சமந்தா பவரும் ஒருவர்.
இதற்கான முன்னெடுப்புகள் தீவிரப்படுத்தப்பட்ட காலகட்டத்தில் இராஜாங்கச் செயலராக ஹிலாரி கிளின்டன் இருந்தார்.
அவருடன் தேசிய பாதுகாப்புச் சபைக்கான ஆலோசகராக சமந்தா பவரும், ஐநாவுக்கான தூதுவராக சூசன் ரைஸ்சும், தெற்கு மத்திய ஆசியாவுக்கான உதவிச் செயலராக ரொபேட் ஓ பிளேக்கும் இருந்தனர்.
இவர்களின் தீவிரமான நிலைப்பாடு இலங்கை விவகாரத்தில் அமெரிக்கா இறுக்கமான போக்கை கடைப்பிடிக்கவும், ஜெனிவாவில் அடுத்தடுத்து தீர்மானங்கள் கொண்டு வரப்படவும் காரணமாயின.
இப்போது இவர்களின் கைகளிலிருந்து பொறுப்புகள் கைமாறியிருந்தாலும் சமந்தா பவர் இலங்கை விவகாரத்தில் ஈடுபாடு கொண்டவராகவே இருக்கிறார்.
ஐநா மனித உரிமைகள் பேரவையின் 30வது கூட்டத்தொடரில், இலங்கை தொடர்பான தீர்மான வரைவில் சர்வதேச நீதிபதிகளின் துணையுடன் விசாரணைப் பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும் என்ற பதம் நீக்கப்பட்ட போது அதனை முற்றிலுமாக நீக்காமல் தடுப்பதில் சமந்தா பவர் காத்திரமான பங்களிப்பை வழங்கியிருந்தார்.
சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்புடன் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்ற விடயம் வரைவில் இருந்து நீக்கப்பட்டதாக அறிந்ததும், ஜெனிவாவில் இருந்து நியூயோர்க்கிற்குப் பறந்து சென்றார் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்.
அங்கு அவர் சமந்தா பவரையும் அவருக்கு அடுத்த நிலையில் துணைத் தூதுவராக இருப்பவருமான இலங்கைக்கான முன்னாள் தூதுவர் மிச்சேல் ஜே சிசனையும் சந்தித்துப் பேசினார்.
அதன் விளைவாகத்தான் சர்வதேச பங்களிப்பு என்ற பதம் முற்றாகவே நீக்கப்படாமல், கொமன்வெல்த் மற்றும் வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்புடன் விசாரிக்கபட வேண்டும் என்ற மாற்றம் மேற்கொள்ளப்பட்டது.
இது சமந்தா பவர் இலங்கை விவகாரத்தில் கொண்டிருக்கும் ஈடுபாடு மற்றும் அதிகாரத்தை புலப்படுத்துகிறது.
அவரது இலங்கைப் பயணம் முக்கியமாக பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் சார்ந்த விடயங்கள் குறித்து ஆராய்வதற்காகவே இடம்பெற்றுள்ளது.
அவரது பயணத்தில் யாழ்ப்பாணத்துக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளதைக் காணமுடிகிறது. இது ஒரு இராஜதந்திர திட்டமிடலும் கூட. அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரியின் இலங்கைப் பயணம் குறுகியதாகவே இருந்தது. பெரும்பாலும் அது அரசாங்க மட்டத்தை திருப்திப்படுத்தும் நோக்குடையதாக இருந்தது.
அதைவிட ஜெனிவா தீர்மான விடயத்தில் இலங்கை அரசாங்கத்துக்குச் சார்பான நிலையை அமெரிக்கா எடுத்து விட்டதான கருத்து தமிழ் மக்களிடம் பொதுவாகவே காணப்படுகிறது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் அமெரிக்கா தமிழர்களை கைவிட்டு விட்டதான பரவலான விமர்சனங்கள் உள்ளன.
இந்தநிலையில் தான் வடக்கின் மீதான கரிசனையை கூடுதலாக வெளிப்படுத்தும் வகையில் சமந்தா பவரின் பயணம் அமைந்திருக்கிறது. இது அமெரிக்கா மீதான நம்பிக்கையை தமிழ் மக்களிடம் மீண்டும் ஏற்படுத்துவதற்கான ஒரு உத்தியும் கூட.
இந்தப்பயணத்தின் போது சமந்தா பவர் இலங்கை அரசாங்கத்தை ஊக்குவிக்கும் கருத்துக்களை முன்வைத்தாலும் தற்போதைய பொறுப்புக்கூறல் மற்ஹறும் நல்லிணக்க முயற்சிகளில் தமிழ் மக்களுக்கு நம்பிக்கையூட்டுவதற்கு அதிக சிரத்தை காட்டுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனென்றால் இந்த முயற்சியில் முக்கியமானதும் முதன்மையானதுமான பங்காளராக இருப்பது தமிழ் மக்கள் தான்.
அவர்கள் இதன் மீது நம்பிக்கையீனத்தை வெளிப்படுத்தினால் அது ஒட்டுமொத்த முயற்சிகளையும் வீணடித்து விடும் என்பதை சமந்தா பவர் போன்றவர்களால் புரிந்து கொள்வது கடினமல்ல.
எனவே தான் அவர் யாழ்ப்பாணத்தில் கூடுதல் கவனத்தைச் செலுத்தியிருக்கிறார்.
எது எவ்வாறாயினும் ஜெனிவா தீர்மான விடயத்தில் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அவநம்பிக்கையை போக்குவதற்கு இந்த தீர்மானத்தையேனும் இதயசுத்தியுடன் நடைமுறைப்படுத்துவதற்கு சமந்தா பவர் போன்ற அமெரிக்க அதிகாரிகள் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டியிருக்கும்.
அதனைச் செய்யத் தவறினால் சமந்தா பவர் மட்டுமல்ல, ஒட்டுமொத்த அமெரிக்கா மீதான தமிழ் மக்களின் பார்வை என்பது, சந்தர்ப்பவாதம் என்ற அடிப்படையிலானதாகவே இருக்கும்
ஹரிகரன்

0 Responses to சமந்தாவின் வருகை எதற்காக? - ஹரிகரன்