ஃபாரீஸ் தாக்குதலில் மூளையாகச் செயல்பட்டவர் இதுவரை தேடப்பட்டு வந்த நிலையில் சற்று முன்னர் அவரை போலீசாரால் சுற்றி வளைத்து உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 13ம் திகதி ஃபாரீஸ் நகரின் 6 முக்கிய இடங்களில் தீவிரவாதிகள் மனித வெடிக்குண்டுத் தாக்குதல் நிகழ்த்தினர். இதில் 129 பேர் பலியான நிலையில் 300க்கும் மேற்பட்டவர்கள் படு காயத்துடன் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்நிலையில் தீவிரவாதத் தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுக் கொண்டது.இதில் சில முக்கியக் குற்றவாளிகள் கொல்லப்பட்ட நிலையில், சிலரை போலீசார் கைது செய்தும் உள்ளனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணைப் படி, இந்தத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவர் தப்பித்து ஃபாரீஸ் நகரில் பதுங்கி உள்ளதாகத் தகவல் வெளியானது. போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இருக்கையில், ஃபாரீஸ் புறநகர் அடுக்குமாடிக் குடியிருப்பில் தேடப்பட்டு வந்த தீவிரவாதி பதுங்கி இருப்பதாக போலீசார் அவரை சுற்றி வளைத்தனர். இரு தரப்புக்கும் இடையில் தற்போது துப்பாக்கிச்சூடு நடைபெற்று வருகிறது என்றும், பெண் மனித வெடிக்குண்டு உட்பட 7 மனித வெடிக்குண்டுகளை தீவிரவாதிகள் இதுவரை அந்த இடத்தில் வெடிக்கச் செய்துள்ளதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

0 Responses to ஃபாரீஸ் தாக்குதலில் மூளையாகச் செயல்பட்டவர் போலீசாரால் சுற்றி வளைப்பு