இந்தியாவின் ஐந்து மாநிலங்களில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தத் திட்டம் தீட்டியுள்ளதாகத் தகவல் தெரிய வந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் ஃபாரீசில் வெள்ளிக்கிழமை அன்று கடும் தாக்குதல் நிகழ்த்தியுள்ளனர். இந்நிலையில் இந்தியாவின் மேற்கு வங்கம், ஜார்கண்ட், ஜம்மு காஷ்மீர், அசாம் உள்ளிட்ட 5 மாநிலங்களிலும், 2 பெரிய நகரங்களிலும் பெரும் தாக்குதல் நடத்தத் திட்டம் தீட்டியுள்ளது மத்திய அரசுக்குத் தெரிய வந்துள்ளதாக ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். தாக்குதலை எதிர்க்கொண்டு முறியடிக்கவும் மத்திய அரசு தேவையான ஏற்பாடுகளை செய்து உள்ளதாகவும் ராஜ்நாத் சிங் மேலும் தெரிவித்துள்ளார்.
அதோடு, ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு ஒரு மாநிலம் ஒரு நாடு என்றில்லாமல் உலகம் முழுக்க உள்ள நாடுகளுக்கும் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது என்றும் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

0 Responses to இந்தியாவின் ஐந்து மாநிலங்களில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தத் திட்டம்: ராஜ்நாத் சிங்