Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழகம் ஆந்திராவில் மழை வெள்ள சேதம் குறித்து அறிய பிரதமர் நரேந்திர மோடி ஹெலிகாப்டரில் பார்வையிட உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தை அடுத்து ஆந்திராவிலும் கடந்த 2 வாரங்களாக கன மழை பெய்து மாநிலத்தையே புரட்டிப் போட்டுள்ளது.இதற்கு இரு மாநில அரசுகளும் போர்க்கால நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருக்க, மத்திய அரசிடம் நிதியுதவியும் கேட்டுள்ளது இரு மாநில அரசுகளும். இதற்கிடையில் வெள்ள சேத பாதிப்புக் குறித்து அறிய பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் மற்றும் ஆந்திராவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

நரேந்திர மோடி சேத பாதிப்புக் குறித்து அறிய ஹெலிகாப்டரில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை பார்வையிடுவார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

0 Responses to தமிழகம், ஆந்திராவை ஹெலிகாப்டரில் பிரதமர் நரேந்திர மோடி பார்வையிடுகிறார்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com