யாழ். கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவன் ராஜேஸ்வரன் செந்தூரனின் தற்கொலை மரணம் அனைத்து தரப்பினராலும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தன்னுடைய இரங்கல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “ராஜேஸ்வரன் செந்தூரனின் தற்கொலை மரணத்தையிட்டு நாம் பெரும் அதிர்ச்சியும் ஆழ்ந்த கவலையும் அடைந்துள்ளோம். அவருடைய உணர்வுகளை அவர் வெளிப்படுத்தியிருக்கிறார் என்பதை நாம் உணருகிறோம்.
அவரது இந்த செயல் சகல தரப்பினாலும் ஆழ்ந்த கவனத்தில் எடுத்துக்கொள்ளப் படவேண்டிய விடயம். அவரது குடும்பத்திற்கு எமது ஆழ்ந்த கவலையையும் அனுதாபத்தையும் தெரிவிக்க விரும்புகிறோம்.
இவ்விதமான ஒரு சூழலில் எல்லோரும் அமைதி காக்க வேண்டியது அத்தியாவசியமான தேவை. எவ்விதமான வன்முறையும் இல்லாமல் எங்களுடைய மனவருத்தத்தையும் அனுதாபத்தையும் நாம் ஒற்றுமையாக தெரிவிப்போம். பகிர்ந்து கொள்ளுவோம்.” என்றுள்ளது.
தமிழ் அரசியல் கைதிகளில் விடுதலையை வலியுறுத்தி ராஜேஸ்வரன் செந்தூரன் நேற்று வியாழக்கிழமை தற்கொலை செய்து கொண்டார்.

0 Responses to செந்தூரனின் மரணம் அனைவரினாலும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது: கூட்டமைப்பு