காணாமல் போனோர் தொடர்பான ஐ.நாவின் குழு இன்று கிளிநொச்சியில் தனது விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
இன்று மதியம் 12 மணிக்கு கிளிநொச்சிக்கு சென்ற குழுவினர், கிளிநொச்சி 155 ஆம் கட்டைப் பகுதியில் உள்ள உலக உணவுத் திட்ட அலுவலக கட்டடத் தொகுதியில் தங்களது விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இன்றைய தினம் மேற்படி குழுவின் முன்னிலையில் கிளிநொச்சியை சேர்ந்த தங்களது உறவுகளை காணாமல் தேடிக் கொண்டிக் கொண்டிருக்கும் 11 குடும்பங்களின் உறவினர்கள் சமூகமளித்திருந்தனர்.
இவர்களிடம் அவர்களது காணாமல்போன உறவினர்கள் எப்படி, எவ்வாறு, எங்கு, எப்பொழுது, காணாமல் போனார்கள் என்ற சம்வங்களை கேட்டறிந்து கொண்டதாக சென்று வந்த காணாமல் போனவர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை காணாமல் போனவர்களின் உறவினர்கள் எவ்வித அச்சமின்றி தங்களது கருத்துக்களை ஐநா குழுவினரிடம் தெரிவிக்க வேண்டும் என்பதற்காகவே ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட எவருக்கும் பார்வையிடவோ, செய்தி சேகரிக்கவோ அனுமதி வழங்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை மேற்படி குழுவினர் பிற்பகல் .5.30 மணிக்கு வடக்கு மற்றும் கிழக்கில் காணமல் போன சுமார் 600 பேரின் உறவுகளுடனும் கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் கலந்துரையாடல் நடை பெற்றது. இவ் கலந்துரையாடலுக்கும் ஊடகவியலாளர்கள் மறுக்கப்பட்டிருன்தனர்.

0 Responses to காணாமல்போனோர் தொடர்பான ஐநா குழுவினர் கிளிநொச்சியில் விசாரணை