Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாது செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் தான் மேற்கொள்வேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நிறைவேற்று அதிகாரத்தினை கைவிட்டு ஜனநாயக சமுதாயம் ஒன்றை கட்டியெழுப்புவது இன்றியமையாத ஒன்று என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மறைந்த மாதுலுவாவே சோபித தேரரின் இறுதிக் கிரியைகள் இன்று வியாழக்கிழமை மாலை பாராளுமன்ற மைதானத்தில் இடம்பெற்றது. அதில், கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சோபித தேரர் பாடுபட்ட நியாயமான சமுதாயத்தை உருவாக்க, முடிந்தளவு நடவடிக்கைகளை மேற்கொள்வது அன்னாருக்கு செய்யும் மிகப்பெரிய உபகாரமும், கௌரவமும் ஆகும். சோபித தேரர் எதிர்பார்த்தது போன்று இந்நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்துவதற்கும் நியாயமான சமுதாயத்தை உருவாக்குவதற்கும் அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் என்றும் ஜனாதிபதி மேலும் கூறியுள்ளார்.

0 Responses to நிறைவேற்று அதிகாரத்தினை ஒழிக்க முயல்வேன்: ஜனாதிபதி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com