சிவனொளிபாதமலை யாத்திரைக்கு வந்த ஐந்து பிள்ளைகளின் தாய் ஒருவர் தனிமையடைந்த நிலையில், சில தோட்ட தொழிலாளர்களினால் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. களுத்துறை தொடங்கொட பிரதேசத்தில் இருந்து தனது மூத்த மகன் மற்றும் மருமகளுடன் யாத்திரைக்கு வந்த குறித்த வயோதிப பெண் (வயது 54) 21.02.2016 அன்று தனிமையடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
அதனையடுத்து தனது தாய் காணாமல் போனதை தெரிந்து கொண்ட மகன் மற்றும் மகள் நல்லத்தண்ணி பொலிஸாரிடம் முறைப்பாடு செய்த பின் தங்களது ஊரிற்கு சென்றுள்ளனர்.
எனினும் குறித்த வயோதிபப் பெண் அங்கும் இங்கும் திரிந்த வண்ணம் நேற்று நல்லதண்ணி லக்ஷபான தோட்டத்திற்கு வந்தடைந்துள்ளார்.
இதனையடுத்து அப்பகுதி தோட்ட தொழிலாளர்கள் குறித்த பெண்ணை மீட்டு நல்லதண்ணி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
சிவனொளிபாதமலையில் அதிக மக்கள் கூட்டம் காரணமாகவே, தான் மகன் மற்றும் மருமகளிடம் இருந்து தனிமையடைந்துள்ளதாக பொலிஸாரிடம் குறித்த பெண் தெரிவித்துள்ளார்.
பின்னர் பொலிஸார் வயோதிபப் பெண்ணின் மகனுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு
தாயை அழைத்துச் செல்லுமாறு தெரிவித்துள்ளார்.
அதன்பின் குறித்த தாயை, மகன் நேற்று அழைத்துச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to யாத்திரைக்கு சென்று தனிமையடைந்த வயோதிபப் பெண்