Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஞானசார தேரருக்கு பிணை!

பதிந்தவர்: தம்பியன் 24 February 2016

நீதிமன்ற வளாகத்துக்குள் வைத்து காணாமற்போன ஊடகவியாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொடவை அச்சுறுத்திய வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இரண்டு இலட்சம் பெறுமதியான சரீரப் பிணையில் தேரரை விடுவிக்குமாறு ஹோமாகம நீதிவான் ரங்கா திஸாநாயக்க நேற்று செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

சாட்சிகளுக்கு அச்சுறுத்தல் விடுப்பதையும், வெவ்வேறு இடங்களில் பல்வேறு அறிக்கைகளை விடுவதையும் நிறுத்துமாறு நிபந்தனை விதித்த நீதிவான், குறித்த வழக்கை எதிர்வரும் 24ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார்.

0 Responses to ஞானசார தேரருக்கு பிணை!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com