Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 68வது பிறந்தநாளுக்கு, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, தொலைப்பேசி மூலம் வாழ்த்து கூறியதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஜெயலலிதா இன்று தமது 68வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். எனவே, தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக தொண்டர்கள் அங்கங்கு நடைப்பெறும் பிறந்தநாள் விழாவில் கலந்துக்கொண்டு கேக் வெட்டி ஜெயலலிதாவின் பிறந்த நாளைக் கொண்டாடி வருகின்றனர். தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக எம் எல் ஏக்கள், அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கீழ் உள்ள அனைத்து இந்து கோயில்களிலும் மரம் நடும் நிகழ்வும் நடைப்பெற உள்ளது. சிவன் கோயில்கள் என்றால் வில்வ மரமும், வைணவ திருத்தலங்கள் என்றால் புண்ணை மரங்களும் நட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கிடையில் அதிமுக இளைஞர் பாசறையைச் சேர்ந்தவர்கள் அமைச்சர்கள் கோகுல இந்திரா, வளர்மதி, வைத்தியலிங்கம், விஜயபாஸ்கர் முன்னிலையில், ஜெயலலிதா உருவப்படத்துடன் கைகளில் பச்சைக் குத்திக் கொண்டனர்.

இன்று காலையில் ஜெயலலிதாவை தொலைப்பேசியில் தொடர்புக் கொண்டு நரேந்திர மோடி, பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டதாத தகவல்கள் வெளியாகி உள்ளன.

0 Responses to முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிரதமர் தொலைப்பேசியில் வாழ்த்து!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com