இலங்கைக் கடற்படையிலிருந்து யோசித்த ராஜபக்ஷ தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அரச நிதி மோசடிக் குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகனான யோசித்த ராஜபக்ஷ, கடற்படையில் லெப்டினனாக பதவி வகித்து வந்தார்.
இந்த நிலையில், நிதி குற்ற விசாரணைப் பிரிவினர் பாதுகாப்பு அமைச்சிடம் முன்வைத்த கோரிக்கையை அடுத்து பெப்ரவரி 28ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் யோசித்த ராஜபக்ஷ பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கெப்டன் அக்ரம் அளவி குறிப்பிட்டுள்ளார்.
சீ.எஸ்.என் தொலைக்காட்சியில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதன்படி, கடற்படைத் தலைமையகத்தின் அனுமதியின்றி யோசித்த ராஜபக்ஷவால் கடற்படை முகாமுக்குள் பிரவேசிக்க முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Responses to யோசித்த ராஜபக்ஷ கடற்படையிலிருந்து இடைநிறுத்தம்!