Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அம்பாந்தோட்டை சூரியவெவவில் அமைக்கப்பட்ட சர்வதேச கிரிக்கட் மைதானம், கிரிக்கட் போட்டிகள் நடைபெறாத நிலையில் 10,000 ரூபா கட்டணம் அறவிடப்பட்டு திருமண வைபவங்களுக்கு வழங்கப்படுவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை வாய்மூல கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்ட விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

தயாசிறி ஜயசேகர கூறியுள்ளதாவது, “சூரியவெவவில் 4283 மில்லியன் ரூபா செலவில் கடந்த ஆட்சியில் “மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கட் மைதானம்” எனும் பெயரில் இந்தக் கிரிக்கட் மைதானம் நிர்மாணிக்கப்பட்டது. ஆயினும், அங்கு கிரிக்கட் போட்டிகள் நடைபெறாத நிலையில், விளையாட்டரங்கை முன்னேற்றும் வரை 10,000 ரூபா கட்டணம் அறவிடப்பட்டு திருமண வைபவங்களுக்கு வழங்கின்றது.

இம்மைதானத்தை விளையாட்டுத்துறை பயிற்சி நிலையமாக முன்னேற்றுவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இவ்விளையாட்டரங்கை நிர்மாணித்தது தொடர்பில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளபோதும் இதனை மூடிவிட முடியாது. இதனை அபிவிருத்தி செய்வது பற்றி கிரிக்கட் சபையுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்.

இந்த விளையாட்டரங்கு அமைக்கப்பட்டது தொடர்பில் பல்வேறு விசாரணைகள் இடம்பெறுகின்றன. இந்த மைதானத்திற்கு அருகில் ஹோட்டல்கள் எதுவும் கிடையாது.ஹோட்டலுக்கு 40 கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டும். இங்கு வருகைதந்த பிரதமர் இதனை சர்வதேச மட்டத்திலான பயிற்சிகள் வழங்கும் நிலையமாக மாற்றுவது குறித்து யோசனை முன்வைத்துள்ளார்.” என்றுள்ளார்.

0 Responses to அம்பாந்தோட்டை சர்வதேச கிரிக்கட் மைதானம் திருமணத்துக்காக வாடகைக்கு; தயாசிறி ஜயசேகர தகவல்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com