Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ரயில்களின் பயணிகள் கட்டணம் உயர்வு இல்லை என்று, மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு அறிவித்துள்ளார்.

மத்திய ரயில்வே பட்ஜெட்டில் பயணிகள் கட்டண உயர்வு இருக்குமா என்கிற கவலையுடன் கூடிய எதிர்ப்பார்ப்பு நிலவியது.இந்நிலையில், பயணிகள் கட்டண உயர்வு இல்லை என்று அறிவித்த சுரேஷ் பிரபு, ரயில்வே பட்ஜெட்டைத் தாக்கல் செய்து வந்தார்.இப்போது உணவு இடைவேளை என்கிற நிலையில், மீண்டும் அவர் பட்ஜெட்டைத் தாக்கல் செய்வார் என்று தெரிய வருகிறது.

2020ம் ஆண்டுக்குள் ஆளில்லா ரயில்வே கிராசிங்குகள் முற்றிலுமாக ஒழிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.ரயில்களின் அனைத்துப்
பெட்டிகளிலும் பெண்களுக்கு 33 சதவிகிதம் இடம் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.அனைத்து ரயில்களிலும் குழந்தைகளுக்குத் தேவையான உணவு விற்கப்படும், அனைத்து ரயில்களிலும் பசுமை கழிப்பறைகள், ரயில் நிலையங்களில் மாற்றுத் திறநாளிகளுக்கான கழிப்பறைகள், ரயில் நிலையங்களில் வைஃபை வசதி, 24 மணி நேர ஹெல்ப் லைன் வசதி என்று பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகிறார் சுரேஷ் பிரபு .

0 Responses to ரயில்வே பயணிகள் கட்டணம் உயர்வு இல்லை:ரயில்வே பட்ஜெட்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com