Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

திங்கட்கிழமை டோக்கியோவில் நடைபெற்ற சந்திப்பு ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு ஜப்பான் பிரதமர் பேட்டியளித்த போது ஜப்பான் கம்பனிகள் எகிப்து அரசுடன் சுமார் 2 டிரில்லியன் யென் ($17.7 பில்லியன் டாலர்) பெறுமதியான வணிக முதலீட்டை மேற் கொள்ளவிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இம்முதலீடுகள் முக்கியமாக மின்சாரம் மற்றும் சக்தித் தேவை தொடர்பாக இருக்கும் எனவும் அறிவிக்கப் பட்டுள்ளது.

பிரதமர் சின்ஷோ அபே குறித்த முதலீடுகள் பற்றிய தகவல்களை வெளியிடவில்லை என்ற போதும் ஜப்பான் வெளியுறவுத் துறை அமைச்சு வெளியிட்ட தகவலில் எதிர்வரும் புதன்கிழமை எகிப்து மற்றும் ஜப்பானுக்கு இடையே சுமார் 10 துறைகளில் வணிக ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப் படவுள்ளதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது. 2011 ஆம் ஆண்டு ஐரோப்பாவில் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலையை அடுத்து எகிப்தும் கடும் பொருளாதரச் சரிவையும் சுற்றுலாத்துறை வீழ்ச்சி மற்றும் வெளிநாட்டு முதலீடுகள் தளர்வு போன்ற பிரச்சினைகளை எதிர் கொண்டு வந்தது. இந்நிலையில் தான் ஜப்பான் எகிப்துக்குக் கை கொடுக்க முன் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முக்கியமாக எகிப்தின் சமூகக் கட்டமைப்புக்களான ரயில்வே முகாமை, சக்தி நிர்வாகம், போன்ற துறைகளில் ஊக்குவிப்புக் கிடைக்கும் என எதிர் பார்க்கப் படுகின்றது. இதைவிட பாதுகாப்பு மற்றும் இராஜதந்திர உறவும் வலுப் படுத்தப் படவுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

0 Responses to எகிப்துடன் $18 பில்லியன் பெறுமதியான பாரிய வணிக முதலீட்டை மேற்கொள்கின்றது ஜப்பான்!

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com