தமிழகத்தில் பாஜக கூட்டணிக் குறித்து இறுதி செய்ய மீண்டும் பிரகாஷ் ஜவடேகர் தமிழகம் வருவார் என்று,பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கூறியுள்ளார்.
சென்னை தியாகராயா நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற வேண்டும் என்பதற்காக சிறப்பு யாகம் நடைபெற்றது.இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை, நாளை பிரகாஷ் ஜவடேகர் தமிழகம் வருவார் என்றும், அப்போது கூட்டணிக் குறித்து இறுதி செய்வார் என்றும் கூறினார். நாடாளுமன்ற செயல்பாடுகளுக்கு ஏற்ப ஜவடேகர் வருகை இருக்கும் என்றும், அது மட்டுமல்ல அகில பாரத பாஜக தலைவர் அமித் ஷாவும் தமிழகம் வருவார் என்றும் அவர் கூறியுள்ளார்.
தேமுதிகவுடன் இணைந்து மக்களைவைத் தேர்தலில் போட்டியிட்ட காரணத்தினால், எங்கள் கூட்டணியில் தேமுதிக நீடிக்க வேண்டும் என்று சகோதரர் விஜயகாந்துடன் பேச்சுவார்த்தை ந்டத்தி வருகிறோம் என்று தமிழிசை மேலும் கூறினார்.

0 Responses to பாஜக கூட்டணிக் குறித்து இறுதி செய்ய மீண்டும் பிரகாஷ் ஜவடேகர் தமிழகம் வருகை: தமிழிசை