Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பாண் விலை 4 ரூபாவினால் அதிகரிப்பு!

பதிந்தவர்: தம்பியன் 22 March 2016

450 கிராம் பாண் ஒன்றின் விலை 4 ரூபாவினால் நேற்று திங்கட்கிழமை நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கோதுமை மாவின் விலை கிலோ ஒன்றுக்கு 7.20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்தே பாணின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, பாண் விலை அதிகரிப்பை எதிர்த்து பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் மீது அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் வழக்குத் தொடரப் போவதாக எச்சரித்துள்ளது.

0 Responses to பாண் விலை 4 ரூபாவினால் அதிகரிப்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com