வடகொரியாவின் ஆத்திரமூட்டும் செயற்பாடுகள் காரணமாக அதன் மீது பொருளாதாரத் தடை விதிக்க அமெரிக்காவும் சீனாவும் நீண்ட காலமாகவே ஆலோசித்து வந்தன.
அண்மையில் இந்த விவகாரத்தை ஐ.நா பாதுகாப்புச் சபையில் இவை தாக்கல் செய்ததை அடுத்து இன்று செவ்வாய்க்கிழமை ஐ.நா பாதுகாப்புச் சபை வடகொரியா மீது பொருளாதாரத் தடை விதிப்பதா இல்லையா என்பது குறித்து வாக்கெடுப்பு நடத்த முன் வந்துள்ளது.
இந்த பொருளாதாரத் தடை முக்கியமாக வடகொரியாவுக்குச் செல்லும் எந்த ஒரு கார்கோ பொதிகளையும் பரிசோதிப்பது, மற்றும் சிரியா, ஈரான், வியட்நாம் ஆகிய இடங்களில் செயற்பட்டு வரும் வடகொரிய ஏஜண்டுக்களைக் கைது செய்வது என்பவற்றையும் உள்ளடக்கியுள்ளது. இது தொடர்பில் திங்கட்கிழமை நிருபர்கள் வெளியிட்ட அறிக்கையில் ஜனவரி 6 இல் வடகொரியா நடத்திய அணுவாயுதப் பரிசோதனை ஆனது அதிகபட்ச அத்துமீறல் என்றும் இந்நடவடிக்கையே ஐ.நா வாக்கெடுப்புக்கு வழிகோலியிருப்பதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும் கடந்த வாரம் வடகொரியாவின் அணுவாயுதப் பரிசோதனை அச்சுறுத்தல் மற்றும் பதிலுக்கு பொருளாதாரத் தடை குறித்து 15 நாடுகளின் கவுன்சிலின் தீர்வுப் பொதியை அமெரிக்கா மும்மொழிந்திருந்தது.
வடகொரியா மீது பொருளாதாரத் தடை விதிக்கப் பட்டால் அந்த நாட்டுக்கு வெளியில் இருந்து எந்த நாடும் ஆயுத வழங்குதலோ, இராணுவ உதவியளித்தலோ மேற்கொள்ளாது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அமெரிக்காவில் இருந்து $2000 டாலருக்கு அதிக பெறுமதியுடைய லக்சரி, கிறிஸ்டல் மற்றும் விளையாட்டுத் துறை பொருட்களும் வடகொரியாவின் தலைநகர் ப்யொங்யாங்கிற்கு அனுப்பப் படாது என்றும் தெரிய வருகின்றது. 2006 ஆம் ஆண்டு முதல் வடகொரியாவின் அணுப் பரிசோதனைக்கு ஐ.நா தடை விதித்து இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

0 Responses to அமெரிக்கா, சீனா இணங்கிய வடகொரிய மீதான பொருளாதாரத் தடை, ஐ.நா இல் வாக்கெடுப்பு