தேமுதிக திமுக கூட்டணியில் இணைய வேண்டும் என்பது மனித நேய மக்கள் கட்சியின் ஜவஹருல்லா விடுத்துள்ள தனிப்பட்ட அழைப்பு என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
மனித நேய மக்கள் கட்சி, சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து, இரண்டு இடங்களில் வெற்றிப் பெற்றது.பின்னர் மக்களவைத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி சேர்ந்து மயிலாடு துறை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை சந்தித்தது. மக்கள் நல கூட்டாட்சி அமைப்பில் மனித நேய மக்கள் கட்சி பின்பு இணைந்தது. பின்னர் அது மக்கள் நலக் கூட்டணியாக மாறிய நிலையில், அதிமுவில் மனித நேய மக்கள் கட்சி இணையும் என்று தகவல் வெளியானது. ஆனால், அதிமுகவிலிருந்து அழைப்பு வராததால், திமுகவில் இணைய சம்மதம் தெரிவிக்க ஸ்டாலின் இல்லத்தில் அக்கட்சியின் தலைவர் ஜவஹருல்லா
ஸ்டாலினை சந்தித்தார்.
ஸ்டாலின் திமுகவில் மனித நேய மக்கள் கட்சி இணைய வரவேற்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜவஹருல்லா, திமுக கூட்டணியில் தேமுதிக, தமாகா இணைய வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். இதுக்குறித்து செய்தியாளர்கள் ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பியபோது, ஏற்கனவே தலைவர் அழைப்பு விடுத்தார். அழைப்பு விடுத்துள்ளோம், வருவதும் வராததும் அவரவர் உரிமை என்று அப்போதே நான் சொல்லி இருந்தேன். எனவே, இப்போது ஜவஹருல்லா அழைப்பு விடுத்துள்ளது அவர் சொந்த தனிப்பட்ட அழைப்பு என்று ஸ்டாலின் கூறியுள்ளார்

0 Responses to தேமுதிக திமுக கூட்டணியில் இணைய வேண்டும் என்பது ஜவஹருல்லா அழைப்பு