Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நடிகர் கலாபவன் மணி அருந்திய மதுவில் கலந்து இருந்த பூச்சிக்கொல்லி மருந்து பாட்டிலை வாங்கி வந்தவர் மணி மாமனார் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது.

பிரபல நடிகர் கலாபவன் மணி கடந்த 6ம் திகதி காலமானார். அவரது பண்ணை வீட்டில் அவர் உயிரிழந்தார். அங்கு கலாபவன் மணி அருந்திய போதை மருந்தில் பூச்சிக்கொல்லி மருந்துக்கலவை இருந்ததாக பிரேத பரிசோதனையில் தெரிய வந்தது. இதனை அடுத்து விசாரணைகளைத் தீவிரப் படுத்திய நிலையில், இந்தபூச்சிக் கொல்லி மருந்தை வாங்கி வந்தவர் கலாபவன் மணியின் மாமனார்தான் என்று தெரிய வந்துள்ளது. இவர் எதிற்காக பூச்சிக்கொல்லி மருந்து பாட்டில் வாங்கினார், இந்த பாட்டில் கலாபவன் மணியின் பன்னைவீட்டுக்குச் சென்றது எப்படி, கலாபவன் மணி அருந்திய போதை பானத்தில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து எப்படி என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையில் மணியின் அருகிலிருந்த மற்றொரு நடிகர் தாம் மது அருந்தவில்லை என்றும், உடனே வீட்டுக்கு கிளம்பி விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.பணியாட்கள் இருவர் விசாரணையில் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்து வருகின்றனர்.இவர்கள் கலாபவன் மணி மருத்துவமனியில் இறந்த அடுத்த சில நிமிடங்களில் வீட்டுக்குச் சென்று கலாபவன் எடுத்த வாந்தியை சுத்தம் செய்து., தடயங்களை அழித்துள்ளனர் என்பதையும் போலீசார் கண்டுப்பிடித்து உள்ளனர்.விசாரனணை மேலும் தீவிரமடைந்து வருகிறது.

0 Responses to கலாபவன் அருந்திய மதுவில் கலந்து இருந்த பூச்சிக்கொல்லி மருந்து பாட்டிலை வாங்கி வந்தவர் மணி மாமனார்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com