முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் கொள்கையாக கொள்ளையடிப்பதே இருந்ததாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
களனியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கூட்டமொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி தொடர்ந்திருந்தால், நாட்டின் பொருளாதாரம் முற்றாக வீழ்ந்திருக்கும். அரச சேவையாளர்களுக்கு கொடுப்பனவு வழங்க, பணம் சிறிதும் இல்லாமல் போயிருக்கும்.
தற்போதைய ஆட்சியிலும் ஊழல்வாதிகள் இருக்கத்தான் செய்கின்றனர். மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியின் கீழ் இருந்த சில ஊழல்வாதிகள் நாட்டின் நிர்வாகப் பிரிவுகளை இன்னும் தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.
நுரைச்சோலை அனல் மின் நிலையத்தை நிர்மாணிக்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதிகளவான தரகுப் பணத்தை பெற்றுக்கொண்டார். இவ்வாறு கொள்ளையடிப்பதும் ஊழலுமே அவர்களது கொள்கையாக இருந்தது.” என்றுள்ளார்.

0 Responses to கொள்ளையே மஹிந்தவின் கொள்கை: சந்திரிக்கா