Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வொன்றைக் காண்பதற்கு எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனின் செயற்பாடுகள் முக்கிய உந்துசக்தியாக இருப்பதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தேசியப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பிலான நடவடிக்கைகள் குறித்து கொழும்பு ஊடகமொன்று எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்ட விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளதாவது, “சிரேஷ்ட அரசியல்வாதி என்ற வகையில் இரா.சம்பந்தனின் ஆராக்கியமான பங்களிப்புடன், இப்பிரச்சினைக்கு தீர்வை காணலாம் என்ற நம்பிக்கை உள்ளது.

இரண்டு பிரதான கட்சிகளும் ஒன்றிணைந்து நல்லாட்சியை உருவாக்கியுள்ள இந்த அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பிரச்சினைகளுக்கு தீர்வு காணாவிட்டால், தமிழ் மற்றும் சிங்கள மக்களின் எதிர்காலம் இருண்ட நிலைக்குச் சென்றுவிடும்.

புதிய அரசியலமைப்பினூடாக தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் தீர்வொன்றை பெறமுடியும். தமிழ் மக்கள் இதுகுறித்து அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். எனினும், நாட்டின் நல்லிணக்க செயற்பாட்டினை சில இனவாத சக்திகள் குழப்புவற்கு முனைகின்ற நிலையில், அவற்றை நிராகரித்து அவசியமான நேரத்தில் சிறந்த திட்டங்களை அரசாங்கம் முன்வைக்கும்.” என்றுள்ளார்.

0 Responses to அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கு இரா.சம்பந்தன் முக்கிய பலமாக இருப்பார்: விஜயதாச ராஜபக்ஷ

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com