ஆட்சியதிகாரத்தை தங்களிடம் தருமாறு இன்று நெஞ்சிலடித்துக் கொண்டு மேடைகளில் கூக்குரலிடும் முன்னாள் ஆட்சியாளர்கள் குறித்து மக்களுக்கு நிறையத் தெளிவிருக்கின்றது என்று மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அம்பாறை மாவட்டத்திலுள்ள பாலமுனை பொது மைதானத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 19வது தேசிய மாநாட்டில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி கூறியுள்ளதாவது, “புதியதோர் அரசாங்கத்தை அமைப்பதற்கு தன்னிடம் அதிகாரத்தை ஒப்படைக்குமாறு இன்று ஒருசிலர் தமது நெஞ்சில் அடித்துக்கொண்டு மேடைகளில் கூக்குரலிட்டபோதும் அவர்களின் செயற்பாடுகள் பற்றி இந்நாட்டு மக்கள் நன்கறிவார்கள். நெஞ்சில் அடித்துக்கொள்பவர்களுக்குத் நான் பயப்படாததன் காரணமாகவே அப்போதிருந்த அரசாங்கத்திலிருந்து வெளியேறி புதியதோர் அரசாங்கத்தை அமைத்தேன்.
நாட்டில் இன்று காணப்படுவது நேற்று இன்று உருவான பிரச்சினைகள் அன்றி 10, 15 ஆண்டுகளாக காணப்பட்ட பிரச்சினைகள் ஆகும். இந்த அனைத்துப் பிரச்சினைகளுக்கும் குறுகிய காலத்திற்குள் தீர்வு காண முடியாதபோதும், ஒவ்வொன்றாக இப்பிரச்சினைகளைத் தீர்த்து மக்களுக்கு நியாயம் வழங்குவதற்கு அரசாங்கம் கட்டுப்பட்டுள்ளது.
நாட்டில் உறுதிசெய்யப்பட்டுள்ள சுதந்திரம் மற்றும் ஜனநாயகம் என்பன காரணமாக கூட்டங்கள் நடாத்துவதற்கும் ஊர்வலங்களை மேற்கொள்வதற்கும் அனைவருக்கும் சுதந்திரம் உள்ளது. அதனை வழிநடாத்தும் தலைவர்கள் சிலர் முன்னைய காலங்களில் வெள்ளை வான்களை அனுப்பி ஆட்களை காணாமல் செய்ததைப் போன்று செய்வது தற்போதைய அரசாங்கத்தின் கொள்கையல்ல.
எவ்வாறான கோசங்களை முன்வைத்தாலும் எதிர்வரும் 5 ஆண்டுகள் நிறைவடையும் வரை இந்த அரசாங்கத்தை மாற்றுவதற்கு எவராலும் முடியாது. தோல்வியடைந்த அரசியல் சக்திகள் மேலும் தோல்விகளைத் தழுவி அரசியலில் இருந்து ஒதுங்கும் விதமாக எதிர்வரும் 5 ஆண்டுகளுக்குள் இந்நாட்டுக்குத் தேவையான சமூக, பொருளாதார மாற்றத்தை மேற்கொள்வதற்குப் பாடுபடுவோம்.” என்றுள்ளார்.

0 Responses to முன்னாள் ஆட்சியாளர்கள் இன்று நெஞ்சிலடித்துக் கொண்டு கூக்குரலிடுகின்றனர்: மைத்திரிபால சிறிசேன