Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நாட்டில் கட்டியெழுப்பப்படும் நல்லிணக்கத்தையும், ஒருமைப்பாட்டையும் குழப்புவதற்கு சில தரப்புக்கள் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றஞ்சாட்டியுள்ளார்.

புதிய அரசியலமைப்பு தொடர்பில் மக்கள் கருத்தறியும் குழு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேற்று செவ்வாய்க்கிழமை சந்தித்து கருத்துக்களை கேட்டறிந்தது. இதன்போதே, ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இந்தச் சந்திப்புத் தொடர்பில் புதிய அரசியலமைப்பு தொடர்பில் மக்கள் கருத்தறியும் குழுவின் தலைவரான லால் விஜயநாயக்க குறிப்பிட்டுள்ளதாவது, "நாங்கள் 25 மாவட்டங்களில் மேற்கொண்ட மக்கள் கருத்தறியும் செயற்பாட்டில் 5 ஆயிரத்துக்கும் அதிகமான கருத்துகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இது தொடர்பிலான விளக்கத்தை நேற்று நடைபெற்ற சந்திப்பில் நாங்கள் ஜனாதிபதியிடம் தெரிவித்தோம்.

அத்துடன், மகாநாயக்கர்கள், மதத் தலைவர்கள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் என இன்னும் சில தரப்பினரைச் சந்திக்கவேண்டியுள்ளது. அவை அனைத்தும் பூர்த்தியாகிய பின்னர் எதிர்வரும் ஏப்ரல் இறுதிவாரத்தில் அறிக்கையைச் சமர்ப்பிப்போம் என்று ஜனாதிபதியிடம் தெரிவித்தோம்.

எமது கருத்துகளை செவிமடுத்த ஜனாதிபதி, "சமாதான மற்றும் நல்லிணக்கத்துக்கான முயற்சிகளை அரசு முன்னெடுத்து வருகிறது. அதன் ஒரு கட்டமாகத்ததான் சகல மக்களும் சுதந்திரமாக வாழ வழிவகுக்கக்கூடிய அரசமைப்பை உருவாக்குகின்றோம்.

தற்போது பாராளுமன்றமும் அரசமைப்பு சபையாக மாற்றப்பட்டுள்ளது. மக்களுக்கு ஏற்றவகையில் வெளிப்படையாகச் செயற்படவேண்டியது கட்டாயமா கும்'' என்று குறிப்பிட்டார்.

மேலும், முதன்முறையாக நாட்டின் அனைத்து மக்களின் கருத்துகளும் பெறப்பட்டுள்ளன. இது முன்னேற்றத்திற்கான முதல் படியாகும். கூச்சல் இடுபவர்கள் தொடர்பில் எவரும் அச்சம்கொள்ளத் தேவையில்லை. நல்லிணக்கம் மற்றும் ஒருமைப்பாட்டுக்கு எதிரானவர்கள்தான் மக்கள் மத்தியில் பொய்ப் பிரசாரங்களை மேற்கொண்டுவருகின்றனர் என்றும் ஜனாதிபதி கூறினார்.” என்றுள்ளார்.

0 Responses to நல்லிணக்கத்தை குழப்புவதற்கு சில தரப்புக்கள் முயற்சி: ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com