Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஷவுக்கு சொந்தமானது என்று கூறப்படும் கல்கிசை மிஹிந்து மாவத்தையிலுள்ள இரு மாடிகளைக் கொண்ட வீடொன்று நேற்று செவ்வாய்க்கிழமை நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸாரினால் சோதனையிடப்பட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவொன்றின் பிரகாரம் முன்னெடுக்கப்படும் விசாரணைக்காக குறிப்பிட்ட வீட்டை சோதனைக்கு உட்படுத்தியதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

சோதனைக்கு உட்படுத்தப்பட்ட வீட்டில் ஷிரந்தி ராஜபக்ஷவின் பெயர் பலகையொன்றும் பொருத்தப்பட்டிருந்தது. அந்த வீட்டின் நிர்மாணப் பணிகள் இன்னும் பூர்த்தியடைந்திருக்கவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

0 Responses to ஷிராந்தி ராஜபக்ஷவின் கல்கிசை வீட்டில் பொலிஸார் சோதனை!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com