யாழ்ப்பாணம் ஆணைக்கோட்டை கூழாவடி பகுதியிலுள்ள பொதுமக்களின் காணிகளை இராணுவத்தின் தேவைகளுக்காக சுவீகரிக்கும் நடவடிக்கைகளை எதிர்த்து பொதுமக்கள் இன்று திங்கட்கிழமை ஆர்ப்பாட்டப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கூழாவடி பகுதிக்கு இன்று திங்கட்கிழமை காலை நில அளவையாளர்கள் காணி அளவைக்காக சென்றிருந்த நிலையில், அதனைத் தடுத்து நிறுத்திய மக்கள், அதனைத்தொடர்ந்து மாவட்டச் செயலகத்தை நோக்கி சென்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அத்தோடு, தமக்கு தீர்வு வழங்க வேண்டும் என்று கோரி மாவட்டச் செயலாளர் என்.வேதநாயகத்தை காரியாலத்திற்குள் வைத்து பூட்டியுள்ளனர். அப்போது, அவர் வேறு வழியாக அங்கிருந்து வெளியேறியதாக கூறப்படுகின்றது. அதனைத் தொடர்ந்து சில மணித்தியாலங்களின் பின் போராட்டக்காரர்களோடு மாவட்டச் செயலாளர் பேச்சுக்களில் ஈடுபட்டார்.
ஆணைக்கோட்டை கூழாவடி பகுதியிலுள்ள காணிகளை இராணுவத்திற்கு கையகப்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்பட்ட காணி அளவீடு, பொதுமக்கள் மற்றும் வடக்கு மாகாண சபையினரால் கடந்த காலங்களிலும் தடுத்து நிறுத்தப்பட்டது சுட்டிக்காட்டத்தக்கது.

0 Responses to இராணுவத்துக்கான காணி சுவீகரிப்பு; யாழ் மாவட்டச் செயலகத்தை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம்!