Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கிளிநொச்சி பரவிபாஞ்சனிலுள்ள இராணுவத்தின் கஜபா படைப்பிரிவின் தலைமையத்துள் நுழைவதற்கு முழுமையான அனுமதியைப் பெற்றுக் கொள்ள வேண்டிய தேவையேதும் இல்லை என்று எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

“தான் இராணுவ முகாமுக்குள் அத்துமீறி நுழையவில்லை. பொதுமக்களின் காணிகளைப் பார்ப்பதற்கே அங்கு சென்றேன். இது தொடர்பில் மேலதிகமாக கதைப்பதற்கு எவ்விதமான தேவையும் இல்லை. தமிழ் மக்களின் பூர்வீகக் காணிகளில், கஜபா படைப்பிரிவின் தலைமையகம் அமைந்துள்ளது.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவிக்கையில், “எவ்விதமான முன் அனுமதியும் இன்றி, இராணுவ முகாமுக்குள் பலவந்தமான முறையில் நுழைய வேண்டாமென எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கு இதற்கு முன்னர் அறிவுறுத்தப்பட்டுள்ளது' என்றுள்ளார்.

0 Responses to இராணுவ தலைமையகத்துக்குள் நுழைவதற்கு அனுமதி பெற வேண்டியதில்லை: சம்பந்தன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com