இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணிச் செயலாளர் சுப்பிரமணியம் சிவகரன் உட்பட கடந்த சில நாள்களாக இடம்பெற்ற கைதுகள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
இது குறித்து பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நேற்று புதன்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “இலங்கை தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த மன்னார் மாவட்டத்திலிருந்து வடக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்ட சுப்பிரமணியம் சிவகரன் இன்று மதியம் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு கொழும்புக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார் என்பதை அறிந்த நாம் ஆழ்ந்த கரிசனை கொண்டுள்ளோம்.
இந்தக் கைது மாத்திரமல்லாமல் கடந்த சில நாள்களாக பல கைதுகள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் பல உத்தியோகபூர்வமான கைதுகள் இல்லாமல் கடத்தப்பட்டு பின்னர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள. இது ஒரு பாரதூரமான விடயமாகக் காணப்படுகின்றது.
இன்றைய கைது உட்பட இவ்வாறான முறைகேடான விதத்தில் இடம்பெறும் கைதுகள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்ளும் அதேவேளை, சம்பந்தப்பட்ட தரப்பினர் இது குறித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என கேட்டுக்கொள்கின்றது.” என்றுள்ளது.

0 Responses to சிவகரன் உள்ளிட்டவர்களின் கைது; தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டனம்!