Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மாகாண சபைகள் எந்தவொரு தீர்மானத்தையும் நிறைவேற்றலாம். ஆனால், எச்சந்தர்ப்பத்திலும் நாட்டை பிரிக்கும் தீர்மானங்களைச் செயற்படுத்துவதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சமஷ்டி முறையை உள்ளடக்கியதாக வடக்கு மாகாண சபையில் தீ்ர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம் தனித் தமிழீழத்துக்கு ஆதரவு தெரிவித்து கருத்து வெளியிட்டுள்ளார். இந்த விடயங்களை மேற்கோள் காட்டி ஊடகவியலாளர் ஒருவர் கேள்வியெழுப்பிய போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்.

தமிழ் நாட்டில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இவ்வாறு தெரிவித்திருப்பது பற்றி நாம் ஒன்றும் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. அத்துடன், வடக்கு மாகாண சபை மட்டுமல்ல எந்த ஒரு மாகாண சபைக்கும் தீர்மானம் நிறைவேற்றும் உரிமை இருக்கிறது. எனினும், நாட்டின் இறைமைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் குந்தகம் ஏற்படுத்தும் எந்தவொரு வரைபுக்கும் அனுமதியோ அல்லது ஆதரவோ வழங்கப் போவதில்லை என்றும் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

மக்களின் அபிலாஷையுடன் உருவாக்கப்பட்டுள்ள நல்லாட்சி அரசை கவிழ்ப்பதற்கோ, ஊழல் மோசடிகள் நிறைந்த மோசமான முன்னைய அரசை மீண்டும் ஆட்சி பீடம் ஏற்றுவதற்கோ ஒரு போதும் இடமளிக்கப் போவதில்லை. தவறிழைத்தவர்களை தண்டிக்கும் அதேவேளை, மீண்டும் எவரும் தவறிழைக்காத சூழல் உருவாக்கப்படும். அதற்கான அடித்தளம் இடப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to நாட்டைப் பிரிக்கும் தீர்மானங்களுக்கு இடமில்லை: ஜனாதிபதி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com