Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அண்மைக் காலமாக ஐரோப்பிய யூனியனில் அகதி அந்தஸ்து மக்களது பிரச்சினை பெருகியே வருகின்றது. குறிப்பாக சுவிட்சர்லாந்து நாட்டிலுள்ள பணச் செழிப்பு மிக்க கிராமங்கள் மேலதிக அகதிகளை உள்வாங்க மறுப்பு தெரிவித்து வருகின்றன. ஓபெர்வில்-லியெலி என்ற கிராமம் இது தொடர்பான வாக்கெடுப்பில் மேலதிக அகதிகளை அனுமதிப்பதற்கு இல்லை என்று வாக்களித்ததுடன் முடியாவிட்டால் 10 அகதிகளை அனுமதிக்க 200 000 யூரோ தண்டப் பணம் மட்டும் கட்டப் போவதாக வாக்களித்துள்ளது.

இந்த கிராமத்தில் வசிக்கும் செல்வந்தர்கள் அகதிகளை அனுமதிக்க முடியாதது ஏன் என்று கேள்வி எழுப்பப் பட்ட போது அகதிகள் இக்கிராமத்து வாழ்க்கை முறையுடன் இணங்கவில்லை என அதிர்ச்சித் தகவலை அளித்துள்ளனர். இதைவிட குறித்த அகதிகளில் பெண்களும் குழந்தைகளும் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப் படும் வாய்ப்பு உள்ளதாகவும் அஞ்சப் படுவதால் அவர்களால் இன்னொரு அமைதியான வாழ்க்கையை வாழ முடியாது எனவும் மெயில் ஆன்லைன் தெரிவித்துள்ளது.

சூரிச் நகரில் இருந்து 10 மைல் தொலைவில் அமைந்துள்ள ஒபெர்வில்-லியெலி கிராமத்தில் 2200 பேர் வசிக்கின்றனர். இவர்களில் 300 பேர் கோடீஸ்வரர்கள் (millionaires) என்பதுடன் சுவிஸ் அரசு எடுக்கும் எந்த முடிவையும் தனிப்பட்ட முறையில் ரத்து செய்யும் அதிகாரம் கொண்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகிக்காத சுவிட்சர்லாந்தின் இக்கிராமத்து மக்கள் இனவெறிப் போக்கு உடையவர்கள் என சர்வதேச மன்னிப்புச் சபை போன்ற மனித உரிமை அமைப்புக்கள் நினைக்கின்றன.

இருந்த போதும் சுவிட்சர்லாந்து அரசு இவ்வருடம் மாத்திரம் 3000 சிரிய அகதிகளை உள்வாங்குவதாக அறிவித்துள்ளது. மேலும் இவ்வருடம் மொத்தம் சுமார் 50 000 அகதிகளை உலகளாவிய ரீதியில் உள்வாங்கவும் சுவிஸ் அரசு திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to 10 அகதிகளுக்கு மாத்திரம் 200 000 யூரோ தண்டப் பணம் கட்டத் தயார்: சுவிஸ் கிராமம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com