அண்மையில் உள்நாட்டுப் போர் நடக்கும் லிபியாவில் இருந்து மத்திய தரைக் கடலில் 3 படகுகளில் 800 இற்கும் மேற்பட்ட அகதிகள் ஐரோப்பாவில் தஞ்சமடைவதற்கென புறப்பட்டு வந்தனர்.
இவர்களது படகுகளில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டு அவை கடலில் மூழ்கியதால் அதில் பயணித்த 700 பயணிகள் பலியாகி விட்டதாக அறிவிக்கப் பட்டுள்ளது. இவ்விபத்துக்கள் புதன் மற்றும் வியாழக்கிழமைகள் அடுத்தடுத்து நிகழ்ந்துள்ளன.
இத்தாலிக் கடற்படையினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட போதும் 79 பேர் வரை தான் காப்பாற்ற முடிந்துள்ளது. கொல்லப் பட்ட அகதிகளில் 40 இற்கும் அதிகமான குழந்தைகளும் அடங்குவர் எனவும் ஐ.நா தகவல் அளித்துள்ளது. அளவுக்கதிகமான ஆட்களுடன் தரம் குறைந்த படகுகளில் வந்ததால் தான் விபத்து ஏற்பட்டுள்ளது. பலியானவர்களில் 45 பேரின் சடலங்களே மீட்கப் பட்டதால் ஏனையவர்கள் காணாமற் போயுள்ளதாகவும் அறிவிக்கப் பட்டுள்ளது.
மேலும் இந்த அகதிகளைச் சட்ட விரோதமாக அழைத்து வந்த சூடான் வாலிபர் ஒருவர் கைது செய்யப் பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

0 Responses to மத்திய தரைக் கடலில் அடுத்தடுத்த படகு விபத்துக்களில் 700 அகதிகள் பலி (காணொளி இணைப்பு)