Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மாவனல்லை - அரநாயக்க, சிறிபுர, பல்லேபாக பிரதேசத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி உயிரிழந்த 17 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

நேற்றைய மண்சரிவில் மூன்று கிராமங்கள் புதையுண்டன. இராணுவத்தினரும், மீட்புப் பணியாளர்களும் மேற்கொண்டு வரும் தேடுதல் பணியிலேயே குறித்த சடங்கள் இன்று புதன்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளன. குறித்த சம்பவம் இடம்பெற்றதை அடுத்து சுமார் 80 பேர் உயிருடன் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, புளத்கொஹுபிட்டிய, களுபஹனவத்தே பகுதியில் இடம்பெற்ற மண்சரிவில், 6 லயன் வீடுகள் மண்ணில் புதையுண்டன. அதிலிருந்த 16 பேரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ள இராணுவத்தினர், தற்போது வரை 3 பேரின் சடலங்களை மீட்டுள்ளனர். பொலிஸாரும், இராணுவத்தினரும் பொதுமக்களுடன் இணைந்து, தொடர்ந்தும் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to அரநாயக்க மண்சரிவில் சிக்கி உயிரிழந்த 17 பேரின் சடலங்கள் மீட்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com