Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பில் அச்சமின்றி தீர்மானங்களை மேற்கொள்ளுமாறு, சுற்றாடல் பாதுகாப்புடன் தொடர்புடைய சகல நிறுவனங்களினதும் தலைவர்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார்.

அத்தகைய தீர்மானங்களை மேற்கொள்ளும் அதிகாரிகளுக்கு எல்லா சந்தர்ப்பங்களிலும் ஆதரவாக இருப்பதற்கு அரசாங்கம் தயாராகவுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

பத்தரமுல்லையில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற வளி தர முகாமைத்துவம் தொடர்பான 6வது தேசிய மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தள்ளார்.

ஜனாதிபதி கூறியுள்ளதாவது, “இயற்கையைப் பாதுகாப்பதற்காக இன்று மேற்கொள்ள வேண்டிய தீர்மானங்களை ஒருபோதம் நாளைக்கு காலம்தாழ்த்த முடியாது. இயற்கையின் இருப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய தீர்மானங்களை எவ்வித தாமதங்களுமின்றி உரிய முறையில் மேற்கொள்வதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்கும்.” என்றுள்ளார்.

மகாவலி அபிவிருத்தி, சுற்றாடல்துறை அமைச்சு, வளி வளங்கள் முகாமைத்துவ நிலையம், கிளீன் ஏயார் ஸ்ரீ லங்கா நிறுவனம் மற்றும் மொரட்டுவை பல்கலைக்கழகம் ஆகியன இணைந்து 6வது முறையாக ஒழுங்கு செய்துள்ள Air That We Breathe – 2016 (‘நாம் சுவாசிக்கும் காற்று 2016 ‘) எனும் இலங்கை வளி தரமுகாமைத்துவம் தொடர்பான தேசிய மாநாடு நேற்று ஆரம்பித்து இன்று நிறைவுபெறுகின்றது.

0 Responses to சுற்றாடல் பாதுகாப்புத் தொடர்பில் அச்சமின்றி தீர்மானங்களை எடுக்க மைத்திரி பணிப்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com