Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு வந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் விசேட பிரதிநிகளுக்கும், தமிழ் மக்கள் பேரவையின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்று வியாழக்கிழமை சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் விசேட பிரதிநிதி மொனிக்கா பின்ரோ (Monicca Pinto) தலைமையிலான தூதுக்குழுவினருக்கும் தமிழ் மக்கள் பேரவையின் செயற்பாட்டுக்குழுவைச் சேர்ந்த பேராசிரியர் சிற்றம்பலம், திரு. ஜனார்த்தனன் மற்றும் பேரவை உறுப்பினரும், யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவருமான கலாநிதி திருக்குமரன் அடங்கிய குழுவினருக்கும் இடையிலேயே இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன் போது, இறுதிப் போரில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு பக்கச்சார்பற்ற சர்வதேச விசாரணை காலதாமதமின்றி இடம்பெற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை அலுவலகத்துக்கும், சர்வதேச சமூகத்துக்குமுள்ள கடப்பாட்டினை பேரவை பிரதிநிதிகள் எடுத்துக்கூறினர்.

அண்மைக்காலமாக தமிழர் பிரதேசங்களில் கட்டுப்படுத்தமுடியாதவாறு அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனை, குழு வன்முறைகள், கொள்ளை, பெண்கள் மீதான வன்முறைகள் தொடர்பில் தமது கரிசனையை வெளிப்படுத்திய பேரவை பிரதிநிதிகள், தமிழ் இனத்தின் அடையாளமான கல்வி, கலாச்சாரம், வாழ்வியல் என்பவற்றை சிதைக்கும் ஒரு தொடர்ச்சியான செயற்பாட்டின் அங்கமாகவே இவற்றை நோக்க வேண்டியுள்ளது என்பதை எடுத்துரைத்து, தமிழர் பிரதேசங்களில் சட்டம், ஒழுங்கை செம்மையாக நிலை நிறுத்தக் கூடியவாறு ஆட்சியதிகாரம் தமிழர்களிடம் வழங்கப்படக்கூடிய அரசியல் தீர்வு வரும்பட்சத்தில் மட்டுமே இவற்றிற்கான ஒரு நிரந்தரத்தீர்வு கிடைக்கும் என்பதையும் தமிழ் மக்கள் பேரவையின் பிரதிநிதிகள் ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதிகளிடம் எடுத்துரைத்துள்ளனர்.

0 Responses to ஐ.நா. விசேட பிரதிநிதிகள் - தமிழ் மக்கள் பேரவை பிரதிநிதிகள் சந்திப்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com