Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனுக்கும் தனக்கும் இடையில் எந்தவித முரண்பாடுகளும் இல்லை என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ். வேம்படி மகளிர் கல்லூரில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட முதலமைச்சரிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது, “எதிர்க்கட்சித் தலைவருக்கும், எனக்குடையில் எந்தவித கருத்து முரண்பாடுகளும் இல்லை. வடக்கு மாகாண அமைச்சர்கள், அவைத் தலைவர் மற்றும் உறுப்பினர்களுடன் விரைவில் கொழும்புக்கு சென்று எதிர்க்கட்சித் தலைவரை சந்திக்கவுள்ளேன். இந்த சந்திப்பின் போது வடக்கு மாகாண சபையால் தயாரிக்கப்பட்டுள்ள தீர்வுத் திட்ட வரைபும் எதிர்க்கட்சித் தலைவரிடம் கையளிக்கப்படவுள்ளது.” என்றுள்ளார்.

0 Responses to சம்பந்தனுக்கும் எனக்கும் இடையில் முரண்பாடுகள் ஏதுமில்லை: சி.வி.விக்னேஸ்வரன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com