மட்டக்களப்பு மாவட்டத்தின் மேற்கு எல்லையில் சட்டவிரோதமாக பல்லாயிரம் ஏக்கர் காடுகள் அழிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண விவசாய மற்றும் கால்நடை அபிவிருத்தி அமைச்சர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர், செங்கலடி பிரதேச செயலாளர் ஆகியோருடன் அந்தப் பகுதிக்கு சென்று பார்வையிட்டுள்ளதாக கூறியுள்ள அவர், “இந்தக் காடழிப்பை அம்பாறை மாவட்டத்தை சேர்ந்தவர்களே மேற்கொண்டுள்ளனர். இதன்பின்னணியில் பௌத்த பிக்குகள் சம்பந்தப்பட்டுள்ளனர்.” என்றுள்ளார்.
குறித்த பகுதியில், சில நிரந்தர மற்றும் தற்காலிக குடியிருப்புக்கள் தற்போது காணப்பட்டாலும், எதிர்காலத்தில் அங்கு சிங்கள மக்களின் திட்டமிட்ட குடியேற்றத்திற்கான அறிகுறிகளாகவே அவற்றைக் கருத வேண்டியுள்ளதாகவும், பௌத்த பிக்கு ஒருவர் அப்பகுதியில் தங்கியிருப்பதாகவும் பௌத்த வழிபாட்டு தலமொன்றிக்கான அடித்தளமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்துள்ளார்.
மேற்கு எல்லையில் அடையாளம் காணப்பட்ட 50 ஆயிரம் ஏக்கர் காணி மட்டக்களப்பு மாவட்ட கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரை காணி எனவும் தற்போது அங்கு நடந்துள்ள காடழிப்பினால் மட்டக்களப்பு கால்நடை பண்ணையாளர்கள் அச்சுறுத்தல்களையும் கால்நடை இழப்புக்களையும் எதிர்கொள்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

0 Responses to மட்டக்களப்பு மேற்கு எல்லையில் சட்டவிரோதமாக பல்லாயிரம் ஏக்கர் காடுகள் அழிப்பு: கி.துரைராஜசிங்கம்