போரை முடிவுக்கு கொண்டு வந்த தன்னிடம் ஆத்ம திருப்தி எஞ்சியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அவருக்கு வழங்கப்பட்டிருந்த இராணுவப் பாதுகாப்பு நேற்று திங்கட்கிழமை விலக்கப்பட்டு, பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அது தொடர்பில் தன்னுடைய பேஸ்புக்கில் பக்கத்தில் தகவலொன்றை எழுதியுள்ளார். அதிலேயே, முன்னாள் ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளதாவது, “எனக்கான இராணுவப் பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது. இன்று அவர்கள் என்னருகில் இல்லை என்பதை நான் உணர்ந்தாலும், நாட்டிலிருந்த போர் எனும் அச்சத்தைப் போக்கி, உங்கள் அனைவருக்கும் பாதுகாப்பைப் பெற்றுக்கொடுத்த ஆத்ம திருப்தி என்னிடம் எஞ்சியுள்ளது. இதுவரை காலமும், எனக்குப் பாதுகாப்பளித்த அனைத்து இராணுவ உத்தியோகத்தர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். உங்களது சேவையை, கௌரவமாக மதிக்கின்றேன்.” என்றுள்ளார்.

0 Responses to ஆத்ம திருப்தி எஞ்சியுள்ளது: மஹிந்த