Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கிளிநொச்சி இரணைமடுக் குளத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு குடிநீர் கொண்டு செல்லப்படுவது தவிர்க்க முடியாதது என்று நகர அபிவிருத்தி மற்றும் நீர்ப்பாசனத்துறை அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

தீர்மானங்களை எடுக்கின்றபோது விவசாயிகளின் அச்சங்களை போக்க நடவடிக்கைகள் எடுப்பது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் நேற்று திங்கட்கிழமை வடக்கு மாகாண குடிநீர்திட்டம் தொடர்பிலான உயர்மட்ட கலந்துரையாடல் நடைபெற்றது. இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போதே ரவூப் ஹக்கீம் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் தெரிவித்துள்ளதாவது, “யாழ்ப்பாணத்திற்கான குடிநீர் திட்டத்திற்கு மாற்றுத் திட்டங்கள் இருக்கின்ற போதும் இரணைமடுக் குளத்திலிருந்து நீர் கொண்டு செல்லப்படும். ஆனால் அதற்கு முன்னதாக மாவட்ட விவசாயிகளின் அச்சங்கள் நிவர்த்தி செய்யப்படுவதோடு அவர்களுக்கான காப்பீடு தொடர்பிலும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

மேலும், 2006ஆம் ஆண்டிலிருந்தே இரணைமடு யாழ்ப்பாணம் குடிநீர் திட்டம் சர்சைக்குரியதாக இருந்து வருகிறது. குடிநீர் பிரச்சினை ஒரு மனிதாபிமான பிரச்சினை. இதில் அரசியல் கலப்பது நியாமற்றது. எனவே, கிளிநொச்சி விவசாயிகள் பாதிக்கப்படாத வகையில் இரணை மடு மேலதிக நீரை யாழ்ப்பாணத்துக்கு கொண்டு செல்வது தொடர்பில் ஆராயப்படுகுறது.

இரணைமடுவில் மேலதிகமாக சேமிக்கப்படுகின்ற நீரில் அரைவாசி விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் அந்த வகையில் இத்திட்டம் குறித்து விவசாயிகள் பீதியடைய தேவையில்லை.

சுன்னாகம் நிலத்தடி நீரில் எண்ணெய் கசிவுகள் கலந்துள்ளது. எனவே அந்த நீர் குடிப்பதற்கு உகந்தது அல்ல. எனினும், வடக்கு மாகாண சபையின் குழுவின் ஆய்வின்படி அவ்வாறு எண்ணெய் கசிவுகள் நீரில் கலக்கவில்லை என்று கூறப்படுகிறது. எமது குழுவின் ஆய்வறிக்கையில் கசிவுகள் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஒரு குழப்பகரமான நிலைமையாகும். இது தொடர்பில் மேலதிகமாக குழுக்களை அமைத்து ஆராயவேண்டும்.” என்றுள்ளார்.

0 Responses to இரணைமடுக் குளத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு குடிநீர் கொண்டு செல்வது தவிர்க்க முடியாதது: ரவூப் ஹக்கீம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com