இறுதி மோதல்களின் போது உயிரிழந்த ஆயிரமாயிரம் உறவினர்களை நினைவு கூர்த்து வடக்கு- கிழக்கு உள்ளிட்ட தமிழர் தாயக பகுதிகள் மற்றும் புலம்பெயர் தேசங்களில் இன்று திங்கட்கிழமை (மே 18) முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றன.
பிரதான நிகழ்வுகள் முல்லைத்தீவு முள்ளிவாய்க்காலில் இன்று காலை 10.00 மணிக்கு வடக்கு மாகாண சபையின் ஏற்பாட்டில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் இடம்பெறுகின்றது. இதில், கட்சி பேதமின்றி அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டிருக்கின்றனர்.
அத்தோடு, ஆலயங்கள், தேவாலயங்கள் உள்ளிட்ட மத ஸ்தலங்களிலும் அஞ்சலி நிகழ்வுகளும், ஆத்மா சாந்திப் பிரார்த்னைகளும் நடைபெற்று வருகின்றன.

0 Responses to தமிழர் தாயகம் எங்கும் உணர்வுபூர்வமாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்!